பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வலிமைக்கு மார்க்கம். வறுமையை விட்டு வெளியே வந்தவர்களாவீர்கள் ; நீங்கள் உங்கள் துன்பத்தை விட்டு வெளியே வந்த வர்களாவீர்கள் ; நீங்கள் உங்கள் தொந்தரவுகளை யும், ஏக்கங்களையும், மனவருத்தங்களையும், குறை கூறல்களையும், தனிமையையும் விட்டு வெளிவந்தவர் களாவீர்கள். உங்கள் - அற்ப சுயாயமாகிய கிழிந்த வுடையை எறிந்துவிட்டுப் பூரண அன்பாகிய புதிய உடையை உடுத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் அகத்திலுள்ள சுவர்க்கத்தை அபரோட்ச மாகக் காண்பீர்கள் ; அஃது உங்கள் புறவாழ்க்கை யிலெல்லாம் பிரதிபிம்பித்துக்கொண்டிருக்கும். ' யான் ' என்பதை வெல்லும் மார்க்கத்தில் தனது பாதங்களைப் பலமாக வைத்து, தெய்வ நம்பிக்கையாகிய ஊன்றுகோலின் உதவியால், துறவு ('பான்' என்பதை விடுதல்) என்னும் பெரும் பாதைவழியாக நடக்கிற மனிதன், மிக மிக மேலான செல்வத்தை அடைவான் ; நாள்தோறும் வளர்கின்ற நித்திய இன்பத்தையும் சுகத்தையும் அநுபவிப் பான்.