பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

வலிமைக்கு மார்க்கம்.

குரிய ஞானத்தை அடைவதற்கு நீங்கள் இப்பொழுதே இங்கேயே தொடங்குங்கள் என்று உபதேசிக்கின்றது.


பரம்பொருட்சட்டத்தைப் பூரணமாக அறிந்திருந்த எபிரேய தேசத்துத் தீர்க்கதரிசிகள், “புறச்சம்பவங்கள் அகநினைப்போடு சம்பந்தப்பட்டவையென்றும், ஒரு தேசத்தின் அழிவோ ஆக்கமோ அக்காலத்தில் அத்தேசத்தாரை ஆண்டுகொண்டிருக்கும் நினைப்புக்களையும் அவாக்களையும் பொறுத்ததென்றும் எப்பொழுதும் சொல்லிவந்தார்கள். அனைத்திற்கும் காரணமாகிய நினைப்பின் வலிமையைப் பற்றிய அறிவு, உண்மையான சகல ஞானத்திற்கும் பலத்திற்கும் ஆதாரமாயிருப்பது போல, அவருடைய தீர்க்க தரிசனத்திற்கும் ஆதாரமாயிருந்தது. தேசசம்பவங்கள் தேசத்தாரது மனோ சக்திகளின் வேலைகளே யன்றி வேறல்ல. யுத்தங்களும் தொத்து நோய்களும் பஞ்சங்களும் பிசகாகச் செலுத்தப்பட்ட மனோ சக்திகள் ஒன்றோடொன்று சந்திப்பதாலும் மோதுவதாலும் உண்டாகின்றன ; அவைதாம் பரம்பொருட்சட்டத்தின் காரியஸ்தராக அறிவு வெளிப்படும் ஸ்தானங்களாம். யுத்தத்திற்கு ஒரு மனிதனது அல்லது ஒரு கூட்டத்தாரது செல்வாக்கே காரண மென்று கூறுதல் அறிவீனம். அஃது ஒரு தேசத்தாரது சுயநலத்தின் மிகக் குரூரமான கோரச் செயல்.



52