பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைப்பின் மௌன வலிமை.

கூடும்? தான் அஞ்சுதலும் கவலுதலும் ஐயுறுதலும் அப்பொருளை மறுத்தலையும் நம்பாதிருத்தலையும் ஒக் கும். இத்தகைய மனோநிலைமைகளிலிருந்து தான் சகல பலஹீனங்களும் தவறுதல்களும் உண்டாகின்றன ; ஏனெனில், அவை உண்மையானநினைப்புச் சக்திகளைப் பிரித்து அழிக்கின்றன ; அவை அவ்வாறு அழிக்கப் பெறாவிட்டால், அவை மிகுந்த வலிமையோடு தமது காரியத்தை விரைந்து செய்து, தமது இலாபகரமான பலன்களைக் கொடுக்கும். இந்நிலைமைகளை ஒழித்தல், பலமுள்ள ஒருவாழ்வை அடையும்படிக்கும், அடி மையாயிருத்தலை விட்டு அரசனாகும்படிக்கும் செய் யும் ; இந்நிலைமைகளை ஒழிப்பதற்கு ஒரே ஒரு மார்க் உண்டு; அஃது அகஞானத்தில் நிலையாக மேன்மேலும் வளர்ந்துகொண்டிருத்தலே. மனத் தினால் தீமையை மறுப்பது மட்டும் போதாது ; ஒவ் வொரு நாளும் தீமையை விலக்கி, அதனை அறிதல் வேண்டும். நன்மையை மனத்தினால் அங்கீகரித்தல் மட்டும் போதாது ; விடாத முயற்சியால் ஒவ்வொரு நாளும் நன்மையைச் செய்து, அதனை அறிதல் வேண்டும். மனத்தை அடக்குவதற்காக விவேகத்தோடு செய்யும் அப்பியாசம், ஒருவனது அகத்தின் நினைப் புச் சக்திகளைப் பற்றிய ஞானத்தை விரைவில் அடை யுமாறு செய்து, பின்னர் அவற்றைச் சரியாகச் செலுத்தற்கும் உபயோகித்தற்கும் வேண்டும் பலத் தை அடையுமாறும் செய்கின்றது. நீங்கள் எவ்வளவுக்