பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலிமைக்கு மார்க்கம்.

கெவ்வளவு உங்களை ஆளுகின்றீர்களோ, அவ்வளவுக் கவ்வளவு உங்கள் மனோ சக்திகளை நீங்கள் ஆண்டு உங்கள் காரியங்களையும் புற நிலைமைகளையும் ஆள் வீர்கள். எந்த மனிதன் கைபட்டால் எல்லாம் அழிந்து போகின் றனவோ, எந்த மனிதன் தன்கை யில் கொடுக்கப்பட்ட வெற்றிகளை வைத்துக்கொள் ளாமல் விட்டு விடுகிறானோ, அந்த மனிதனை எனக்குக் காட்டுங்கள் ; அவன் வலிமைக்கு நேர் மறுதலை யான மனே நிலைமைகளில் இடைவிடாது வசித்துக் கொண்டிருக்கிறானென்பதை நான் உங்களுக்குக் காட்டுகிறேன். ஐயமாகிய சேற்றுநிலத்தில் எப்பொழு தும் உழன்றுகொண்டிருத்தலும், அச்சமாகிய உதிர் மணல்களை எப்பொழுதும் சேர்த்துக் கொண்டிருத் தலும், கவலையாகிய காற்றுக்களால் இடைவிடாது அலைக்கப்படுதலும், ஓர் அடிமையின் வாழ்வை அடை யும்படி செய்யும். அத்தகைய மனிதன், கடவுளி டத்து நம்பிக்கை வையாததாலும், தன்னைச் சரியாக ஆளாததா லும், தனது காரியங்களைச் சரியாக ஆள் வதற்குத் திறமையில்லாதவனாயும், தனது நிலைமை களுக்கு ஓர் அடிமையாயும் இருக்கிறான் ; உண்மை யில், அவன் தனக்கே அடிமையாயிருக்கிறான். அத் தகைய மனிதர்க்குத் துன்பமே ஆசான்; அவர் சகிக்க முடியாத கொடிய - துன்பஅநபவத்தால் பலஹீ னம் நீங்கிக் கடைமுறையாகப் பலம் பெறுகின்றனர்.

நம்பிக்கையும் காரிய முமே வாழ்க்கையின் பலமும் நோக்கமுமாகும். உறுதியான தெய்வநம்பிக்கையும்

56