பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வலிமைக்கு மார்க்கம். துவதாலும் உபயோகிப்பதாலும் முடிக்கக்கூடாத காரியம் ஒன்றுமில்லை. நீங்கள் உங்கள் அகத்துள் ஆழ்ந்து சென்று, ஆராய்ந்து தேடி , அங்கு ஒளித்துக்கொண்டிருக்கிற உங்கள் விரோதிகளை யெல்லாம் ஒழிக்கும் வரையில், நீங்கள் நினைப்பினது கூரிய வலியையாவது, புறத் திலுள்ள ஸ்தூலப் பொருள்களுக்கும் உங்கள் நினைப் புக்குமுள்ள பிரிக்க முடியாத சம்பந்தத்தையாவது, உங்கள் நினைப்பு சமநிலையில் வைக்கப்பட்டுச் சரி யாகச் செலுத்தப்படுங்காலையில் உங்கள் வாழ்க்கை நிலைமைகளைச் சரிப்படுத்திச் சீர்திருத்தும் அதன் சக்தியையாவது நீங்கள் சிறிதும் அறிய முடியாது. நீங்கள் நினைக்கிற ஒவ்வொரு நினைப்பும் நீங்கள் வெளியில் அனுப்புகிற ஒவ்வொரு சக்தியாகும் ; அதன் இயற்கைக்கும் வலிமைக்கும் ஒத்தவாறு அது வெளியே சென்று அதனைப் பெறத்தக்க மனங்களுட் பிரவேசித்துத் தங்கும்; அது திரும்ப, நன்மையாக வோ தீமையாகவோ, உங்கள் பால் வந்து சேரும். ஒரு மனத்திற்கும் மற்றைய மனங்களுக்கும் இடை விடாத சம்பந்தமும் இடைவிடாத கொடுக்கல் வாங் கல்களும் இருக்கின்றன. சுயாப நினைப்புக்களும் கலக் க நினைப்புக்களும் கேட்டையும் அழிவையும் கொடுக் கும் தீமையாகிய பேயின் தூதர் ; அவை வெளியிற் சென்று மற்றைய மனங்களிலுள்ள தீமையை உயிர்ப் பித்து வளர்க்கின்றன ; அவை திரும்ப உங்கள் பால் 60)