பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
சில சொற்களின் பொருள்கள்

   'ஆன்மா',என்பது 'யான்','எனது' எனக்
கருதாது உலக நன்மையையே கருதுகின்ற பேற்றிவு
   'ஜீவன்'என்பது யான்','எனது'எனக் கருதித்
தனது நன்மையையே கருதுகின்ற சிற்றறிவு.
   'மனிதன்'என்பவன் சூக்ஷமஸ்தூல உடம்புக
ளோடு கூடிநின்று நினைக்கின்ற ஜீவன்.
   'மனம்'என்பது ஒரு சூக்ஷம அல்லது சூக்ஷம
ஸ்தூல உடம்போடு கூடிநிற்கின்ற ஜீவனது நினைப்பு.
   'சூக்ஷம உடம்பு'என்பது ஸ்தூல உடம்பின்
பொறிகள் வழியாகக் காணமுடியாத ஓர் உடம்பு.
   'ஸ்தூல உடம்பு' என்பது அப்பொறிகள் வழி
யாகக் காணத்தக்க ஓர் உடம்பு.
   'அகம்' என்பது சூக்ஷமஸ்தூல உடம்புகளில்
மனம் சஞ்சரிக்கின்ற இடம்.
   'புறம்' என்பது ஸ்தூல உடம்பிற்கு வெளியில்
மனம் சஞ்சரிக்கின்ற இடம்.
   'பரோக்ஷஞானம்'என்பதுகேள்வியால் அல்லது
கல்வியால் அடையப்பட்ட அறிவு.
   'அபரோக்ஷஞானம்' என்பதுமனத்தால்அல்
லதுபொறிகளால் காணப்பட்ட அறிவு
   'துன்பம்',துக்கம்'என்பன முறையே 'பொறி
வருத்த'த்தையும் 'மனவருத்த'த்தையும் குறிக்கும்.
   'இன்பம்','சுகம்'என்பன முறையே 'பொறிக்
களிப்பை'யும்'மனக்களிப்பை'யும் குறிக்கும்.
   'போட்டி' என்பது ஒருவரின் மற்றொருவர் மேம்
பட வேண்டுமென்று செய்யும் முயற்சி முதலியன.

vii