பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வலிமைக்கு மார்க்கம். உங்களை ஆண்மையற்றவர்களாகவும், சந்தோஷமற்ற வர்களாகவும், பிரயோஜனமற்றவர்களாகவும் செய்து விடும். உங்கள் அற்ப விருப்பு வெறுப்புக்களையும், உங்கள் கோபமும் சந்தேகமும் பொறாமையுமாகிய வெறிகளையும், உங்களை அடிமைகளாக்கி ஆளாகின்ற நிலையற்ற மற்றைய குணகுணங்களையும் நீங்கள் வெல்ல வேண்டும் ; உங்கள் வாழ்க்கையாகிய வஸ்திரத்தைச் செல்வமும் இன்பமுமாகிய பீதாம்பர மாக்கிக் கொள்ள நீங்கள் விரும்புவீர்க ளாயின், மேற்சொல்லிய வேலையை நீங்கள் செய்து முடிக்க வேண்டும். உங்கள் அகத்திலுள்ள நிலையற்ற குணகுணங்களுக்கு நீங்கள் எவ்வளவு காலம் அடிமைகளாயிருக்கிறீர்களோ, அவ்வளவு காலமும் நீங்கள் உங்கள் ஜீவயாத்திரையில் மற்றைய மனிதர்களையும் வெளித்துணைகளையும் சார்ந்திருக்க வேண்டிய ஆவசியகம் ஏற்படும். நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உறுதியாகவும் பத்திரமாகவும் செல்ல வும் ஒரு பெரிய காரியத்தைச் செய்து முடிக்க வும் விரும்புவீர்களாயின், நீங்கள் கலக்கத்தையும் தோல்வியையும் உண்டுபண்ணும் சகல சஞ்சலங்க ளையும் ஒழித்துவிடவேண்டும். நீங்கள் மௌன நிலையை அடைவதற்கு, அஃதாவது உங்கள் மனத் தை அமைதியாக்குதற்கு; நாள் தோறும் பழக வேண்டும். இது கவலையுள்ள நினைப்பிற்குப் பதில் அமைதியுள்ள நினைப்பையும் பலஹீன நினைப்புக்குப்