பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நினைப்பின் மௌன வலிமை. அடைவீர்கள் ; உங்கள் சந்தோஷம் அளவு கடந்து அதிகப்படும் ; தன்னை ஆள்வதால் உளதாகும் இன் பத்தையும் பலத்தையும் செல்வாக்கையும் நீங்கள் அடையத் தொடங்குவீர்கள். இவ்வின்பமும், பல மும், செல்வாக்கும் இடைவிடாது உங்களிடத்தில் ருந்து வெளியில் சென்றுகொண்டிருக்கும் ; உங்கள் முயற்சி ஒன்றுமில்லாமலும், உங்களுக்குத் தெரியா மலும், வலிய மனிதர்கள் உங்கள் பால் வந்து சேர் வார்கள் ; செல்வாக்கு உங்கள் கையில் கொடுக்கப் படும்; உங்கள் நினைப்புக்களின் மாறுதலுக்குத் தக்க படி, உங்கள் புற நிலைமைகளும் மாறுதலடையும். ஒரு மனிதனது விரோதிகள் அவன் சொந்த வீட்டுக்காரர்களே. எவன் பயனும் பலமும் 4கமும் அடைய விரும்புகிறானோ, அவன் இன்மையும் இவும் மலமும் பொருந்திய நினைப்போட்டங்களைக் கொள் ளும் ஓர் கலனயிருத்தல் கூடாது, அறிவுள்ள கிருகஸ்தன் ஒருவன் தனது வேலைக்காரர்களை யெல்லாம் சரியாக ஆண்டு நல்ல விருந்தினரைத் தன் வீட்டிற்கு அழைப்பது போல, மனிதன் தனதா அவாக்களை யெல்லாம் சரியாக ஆண்டு நல்ல நினைப் புக்களைத் தனது ஆன்மாவின் அரண்மனைக்குள் விடு வதற்குக் கற்றுக்கொள்க வேண்டும். தன்னை அ... கியாள் வதில் சிறிய வெற்றியை அடைந்தாலும், அது பெரிய வலிமையை அவலுக்குக் கொடுக்கும்; எவன் இந்த மேலான பாரியத்தைப் பூசணமாகச்