பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைப்பின் மௌன வலிமை. வெண்பா. மிகவுயர்ந்தவான் சுவர்க்கம் வேண்டுவையேல், என்றும்

  • தகவுயர்ந்த நன்னினைவே தாங்கு;- மிகவிழிந்த

கீழ்நிரயம் வேண்டுவையேல், கேடெல்லாம் நல்கும்பு தாழ்நினைவே யெஞ்ஞான்றுந் தாங்கு.

  • தகவு - ஒழுக்கம்.

நின்னினைப்பே நின்மேல் நிலவும் சுவர்க்கமாம்; நின்னினைப்பே நின்கீழ் நிரயமாம்;-நின்னினைப்பை நின்னினைப்பை யன்றியிவண் இன்பம் அணுவுமிலை; யன்றியிவண் துன்பமிலை *யாங்கு.

  • ஆங்கு -அவ்வாறு.

நினைப்பதனை நீத்தக்கால் நீளுலகம் நீங்கும்; நினைப்பதனை நீத்தக்கால் நீங்கும் வினைப்பயன்கள்; நித்தியமா யுள்ள நினைப்பினின்றே காலமுதல் தத்துவமெல் லாம்நிகழுஞ் *சார்ந்து.

  • சார்ந்து - பொருந்தி.

மதிப்பும் அவமதிப்பும் மாண் அன்பும் *வன்பும் துதிப்புமிழிப் பும்மின்பும் துன்புங் - கதிப்புடனே ஊழையாள் கின்ற உரஞ்சால் நினைப்பினது கோழைவே டங்களெனக் கொள்.

  • வன்பு - பகை

67