பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலிமைக்கு மார்க்கம்.

  • விழையும் இரவியது வெள்ளொளியே யீங்கு

மழைவில்லின் பன்னிறமா மாறும்;- தழைவோ டிலகுமொரு மெய்ப்பொருளே எல்லாருங் காணும் உலகினது பல்பொருளாம் ஓர்.

  • விழையும் - [எல்லாரும்)விரும்பும்.

மெய்ப்பொருளோ நின்மனத்துள் வீற்றுளது; ரின்னான்மா மெய் பொருளையெய் நிற்க வேண்டுவையேல் - கைப்பொருளை நின்மனமெஞ் ஞான்றும் நினைக்கும் படி செயல்நின் கன்மமென நன்றாகக் காண்.

கைப்பொருளை - ஒழுக்கமாகிய பொருளை.

அந்நினைவ நின்கொள்கை யாவையுமே *மெய்யாக்கும்; யுன்னிரயச் சொற்பனத்தைப் போக்கடிக்கும் ;-நன்னடையுத் தூயதவமும்பூண்டார் தொன்றுதொட்டு வாழின்பம் ஏயசுவர்க் கத்துள் இடும்.

மெய்யாக்கும் - உண்மையாக்கும்.

இன்பத்தையாக்குவதிங் கின்பநினைப்பெஞ்ஞான்றுத் துன்பத்தை யாக்குவது துன்பநினைப் - பென்புடல்செய் புண்ணியபா வங்களுடன் பொய்யிருளும் மெய்யொளியும் நண்ணுநினைப் பாக்கிநிற்கும் நன்கு.

  • என்பு உடல் - எலும்பையுடைய சரீரம்.

சீர்சான்ற *மெய்யைத் தினமுநினைப் பாயேல்நீ, சீர்சான்ற மெய்யைத் தெரிவாய் நீ ; - ஏர்சால் மகத்தான மெய்யை மனத்துட்கொள் வாயேல், மகத்தான மெய்யாவாய் மற்று.

  • மெய்யை - மெய்ப்பொருளை.

68