பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரோக்கியமும் வெற்றியும் வலிமையும்.

பாரதக் கதையில் துரியோதனன் பாண்டவரைக் கொல்வதற்காகச் செய்த பல வஞ்சகங்களினின்றும் அவர்கள் தப்பிப் பிழைத்ததை நாம் பாலியர்களா யிருந்த காலத்தில் எவ்வளவு ஆவலோடு வாசித் தோம்? துரியோதனனது வஞ்சகங்களி னின்று பாண்டவர்கள் தப்புவார்க ளென்பதையும், முடிவில் பாண்டவர்களே துரியோதனதிைகளை வெல் வார்க ளென்பதையும் நமது சிற்றறிவு எவ்வளவு நன்றாக அறிந்திருந்தது. எனெனில், மெய்ப்பொருள் சர்வ வல்லமையும் சர்வ நிபாயமுமுள்ள தென்பதும், அது நன்மையையும் நியாயத்தையும் கைவிடாதவர் களைக் கைவிடுவதில்லை யென்பதும், நமக்குத் தெரியும். கடைசியில், பாண்டவர்கள் தூரியோதனனாதிகளை வென்று, தமது அரசாட்சியைக் கைக்கொண்ட பொ ழுது, 5மது மனம் எவ்வளவ பெரிய சந்தோஷத்தை அடைந்தது ?

மெய்ப்பொருள். அணுவக் கணுவாய் 5மது காட்சிக்குப் புலப்படாததா யிருந்தும், அது எல்லா வற்றையும் வெல்லுஞ் சக்தியைக் கொண்டு, நல்லவர்களுக்கு ஆரோக்கியத்தையும், செல்வத்தை யும், சுகத்தையும், அவற்றை அடைவதற்குத் தக்க நிலைமைகளையும் கொடுக்கின்றது; அன்றியும், அது ஞா கா வளர்ச்சியினால் நினைப்பின் வலிமையைப் பற்றிய அறிவையும் உயிர்களின் அகவுலகத்தை ஆளும் ஈட் டங்களைப் பற்றிய அறிவையும் அடைந்திருக்கிறவனு-

69