பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலிமைக்கு மார்க்கம்.

டைய ஆன்மாவோடு ஐக்கியமாகி நித்தியமாக வாழ் கின்றது. நன்மை வடிவாயிருக்கிற கடவுளுக்குச் சரியாக எவர் தமது அகத்தை நல்ல தாக்க நாள் தோறும் முயல்கின்றனரோ, அவர் உண்மையில் மெய்யான ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், சுகத்தையும் அடைகின்றனர். நன்மைக்கு உவமையா கச் சொல்லத்தக்க பொருள் ஒன்று மில்லை; ஒழுக்க விதிகளுக்கு ஒத்துப் புறத்தில் நடப்பதை மாத்திரம் நான் நன்மையென்று சொல்லவில்லை; தூயநினைப்பு, உயர்ந்த கோரிக்கை, சுயநயமற்ற அன்பு, வீண் பெருமையில்லாமை, முதலியவற்றை நன்மை யென்று சொல்லுகிறேன். நல்ல நினைப்புக்களில் இடை விடாது வசித்துக்கொண்டிருத்தலானது, ஒருவனைச் சுற்றி இனிமையும் வலிமையும் பொருந்திய ஒரு சூக்ஷமஆகாயத்தைப் பரப்புகின்றது. அவன் சமீபத் தில் செல்லுகிறவர்களெல்லாம் அதனை உணர்கின் றனர்.

உதய சூரியன் உதவியற்ற இருள்களை யெல் லாம் ஓட்டுவது போல. தூய்மையாலும் தெய்வநம் பிக்கையாலும் பலப்படுத்தப்பட்ட ஓர் அகத்தி னின்று பிரகாசிக்கிற நல்ல நினைப்பின் கிரணங்கள் தீமையின் இருட்சக்திகளையெல்லாம் ஓட்டுகின்றன. எவ்விடத்தில் பூரண தெய்வநம்பிக்கையும் ஒப்பற்ற தூய்மையும் இருக்கின்றனவோ, அவ்விடத்தில் ஆரோக்கியம் இருக்கின்றது, வெற்றி இருக்கின்றது, வலிமை இருக்கின்றது. அத்தகைய நம்பிக்கையும்

70