பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
காப்பு

எளிமைக்கு மூலம் என இகழ நிற்பேன்
வலிமைக்கு மார்க்கம் வரைய - எளிமைக்கு
மூலம் என இரந்து மூவுலகும் காத்தரசாய்க்
காலமிடம் நீத்துநிற்பான் காப்பு.

ஒழுக்கம

ஒழுக்கத்தாற் சீர்சால் புயர்வெல்லாம் எய்தும்;
ஒழுக்கத்தால் மெய்ப்பொருளின் ஓர்வும்- பழுக்கும்:
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்."

அறம்

"சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூங்
காக்கம் எவனோ உயிர்க்"கே?-"அறப்பயனும்
தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்."

பொருள்

"பொன்னின் ஆகும் பொருபடை; அப்படை
தன்னின் ஆகும் தரணி; தரணியின்
பின்னை யாகும் பெரும்பொருள்; அப்பொருள்
துன்னும் காலைத் துன்னாதன இல்லையே."

முயற்சி

"நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும்,-நிலையினும்
மேன்மே லுயர்த்தி நிறுப்பானும், தன்னைத்
தலையாகச் செய்வானும் தான்."

viii