பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரோக்கியமும் வெற்றியம் வலிமையும்.

யம் கொடுக்கும் பிரவாகங்களைச் சிருஷ்டிக்கிற தூய் மை. உண்மையும், வலிமையும் பொருந்திய நினைப் புக்களை ஆள்பவர்களை விட்டு வியாதியானது பறக் தோடுகின்றது. நீங்கள் கோபத்திற்காவது. கவலைக்காவது, பொறாமைக்காவது, பேராசைக்காவது, நேர்மையற்ற வேறு ஒரு மனோநிலைடைக்காவது இடங்கொடுத்துக் கொண்டு, பூரண சரீர ஆரோக்கியத்தை எதிர்பார்ப் தீர்களாயின், நீங்கள் அடைய முடியாத ஒரு கார் யத்தை எதிர்பார்க்கின்றீர்கள்; ஏனெனில், நீங்கள் உங்கள் மனத்தில் வியாதியின் வித்துக்களை இடை விடாது விதைத்துக்கொண்டிருக்கிறீர்கள். அறி வுள்ள மனிதன் எச்சரிக்கையாயிருந்து அத்தகைய மனோநிலைமைகளை நீக்கிவிடுகிறான் ; ஏனெனில், அது துர்நாற்றம் நிறைந்த ஒரு சாக்கடையினும் தொத்து வியாதி நிறைந்த ஒரு வீட்டினும் அதிக அபாயகரமான தென்று அறிவான். நீங்கள் சகல சரீர 'நோய்களிலிருந்தும் நோவுகளிலிருந்தும் தப்பு வதற்கும், பூரண சரீர ஆரோக்கியத்தை அடை வதற்கும் விரும்புவீர்களாயின், நீங்கள் உங்கள் மனத்தை ஒழுங்குபடுத்துங்கள்; உங்கள் நினைப்பை நேர்மைப்படுத்துங்கள்; சந்தோஷகரமான நினைப்புக் களை நினையுங்கள் ; ரம்மியமான நினைப்புக்களை உட்கொள்ளுங்கள் ; நல்விருப்பமாகிய அமிர்தம் உங்கள் இரத்த நாடிகளின் வழியாக ஓடவிடுங்கள்; உங்களுக்கு வேறு மருந்து ஆவசிடாச. மில்லை. படங்கள்