பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆரோக்கியமும் வெற்றியம் வலிமையும். பட்டாலும், நீங்கள் இந் நம்பிக்கையை எப்பொழு தும் கொண்டிருங்கள்; நீங்கள் நிர்ப்பயமாகத் தங்கத்தக்க மலைக்குகை அஃதேயென்று அதற்குத் திரும்புங்கள் ; அழியாததும் அசையாததுமான அதன் அடிவாரத்தில் உங்கள் பாதங்களை உறுதியாக வையுங்கள். அத்தகைய நம்பிக்கையை உறுதியாக நீங்கள் கொண்டிருப்பீர்களாயின், உங்களைத் தாக்க வரும் தீமையின் சக்திகளையெல்லாம், கண்ணாடி யாற் செய்யப்பட்ட பொம்மைகளைப் போல தூள் தூளாக்கத் தக்க ஆன்ம சக்தியை நீங்கள் அடைவீர் கள் ; உலக லாபத்தை அடையக் கருதிய மனிதன் ஒருபோதும் அடைய முடியாத (கனவிலும் அடைய முடியாத) வெற்றியை நீங்கள் அடைவீர்கள். நீங்கள் நம்பிக்கையைக் கொண்டு, சந்தேகத்தை விடுவீர்களா யின், நீங்கள் இதனைச் செய்து முடிப்பது மாத்திர மன்றி நீங்கள் இந்த மலையைப் பார்த்து ' நீ இவ்வி டத்தினின்று நீங்கிச் சமுத்திரத்தில் போய் விழு ' என்று கூறின், அஃது அவ்வாறு நீங்கிப் போய் அங்கு விழும், இந் நம்பிக்கையைக் கைக்கொண்டு, இதனைக் கடைப்பிடியாகப் பிடித்து, இதனை நாள்தோறும் அப்பியசித்து, இதனால் வரும் பெருமையையும் அமைதியையும் அடைந்துள்ள புருஷர்களும் ஸ்திரீ களும் இன்றும் இவ்வுலகில் இருக்கின்றார்கள். அவர் கள் தாம் மனித சமூகத்திற்குரிய விதி விலக்கு களை ஏற்படுத்தியவர்கள் ; துக்கமும் ஆசாங்கமும்