பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

ஆரோக்கியமும் வெற்றியும் வலிமையும்.


ஒரு பொருளை அடைய விரும்பி மடையர் முணுமுணுக்கின்றனர். அப்பொருளை அடைவதற்குரிய வேலைகளைச் செய்து அறிஞர் காத்திருக்கின்றனர். இந்த ஸ்திரீ வேலை செய்திருக்கின்றாள் ; புறத்திலும் அகத்திலும் வேலை செய்திருக்கின்றாள்; தெய்வ நம்பிக்கையும், தெய்வ விசுவாசமும், தெய்வபக்தியும், அருளும், பரோபகாரமு மாகிய கற்களைக் கொண்டு (பொறிகளுக்குப்புலப்படாத) ஆன்மாவின் கைகளால் ஒரு நல்ல ஒளியாலயத்தைக் கட்டியிருக்கின்றாள் ; அதன் பெருமையுள்ள பிரகாசம் எப்பொழுதும் அவளைச் சூழ்ந்துகொண்டிருக்கின்றது. அஃது அவளுடைய கண்களில் பிரகாசிக்கின்றது ; அஃது அவளுடைய முகத்தில் ஒளிர்கின்றது. அதன் வசீகர சக்தியை அவள் சமீபத்தில் செல்பவரெல்லாம் உணர்கின்றனர்.


எவ்வாறு அவள் சுகங்களை அடைந்தனளோ, அவ்வாறே நீங்களும் சுகங்களை அடையலாம். உங்கள் வெற்றியும், உங்கள் தோல்வியும், உங்கள் செல்வாக்கும், உங்கள் முழுவாழ்க்கையும் உங்களிடத்திலேயே இருக்கின்றன ; ஏனெனில், உங்களை ஆளுகின்ற நினைப்புக் கூட்டங்களே உங்கள் விதியை ஆக்கும் கருவிகள். நீங்கள் அன்புள்ள நினைப்புக்களையும் மாசற்ற நினைப்புக்களையும், சந்தோஷ நினைப்புக்களையும் வெளியே அனுப்புங்கள். சுகங்கள் உங்களிடம் வந்து சேரும்: சாந்தியாகிய வஸ்திரம் உங்கள் மேஜையின் மீது விரிக்கப்படும். நீங்கள் வெறுப்புள்ள


6

81