பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
வலிமைக்கு மார்க்கம்
துன்பத்தின் கற்பனை


கவலையும் துன்பமும் துக்கமும் வாழ்க்கையின் சாயைகள்.உலகம் முழுவதிலும் கவலையால் கலங்காத உயிரே இல்லை; துன்பத்தால் துடியாத மனமே இல்லை; துக்கத்தால் துளியாத கண்ணே இல்லை உலகத்தில் பிணியும் மரணமுமாகிய எமதூதரால் உயிர்க்குயிராகிய உறவினர் பிரிக்கப்பட்டுத் துக்கமாகிய இருட் போர்வையால் மூடப்படாத குடும்பம் இல்லை. வலியதாகவும் எளிதில் அறுக்க முடியாததாகவும் தோற்றுகிற தீமை வலையில் சகல மனிதரும் முன்னர் சிக்கிப் பின்னர்க் கவலையாலும் துன்பத்தாலும் துக்கத்தாலும் வருந்துகின்றனர்.


இவ்வருத்தத்திலிருந்து தப்புதற்காகப் புருஷர்களும் ஸ்திரீகளும் எண்ணிறந்த உபாயங்களைச் செய்கின்றனர்; எண்ணிறந்த மார்க்கங்களிற் பிரவேசிக்கின்றனர்; அவற்றால் அழிவில்லாத ஓர் சுகத்தை அடையலாமென்று நம்புகின்றனர். சிலர் மதுபானஞ் செய்தும் விபசாரஞ் செய்தும் திரிகின்றனர்; சிலர் உலகக்குழுவை விட்டு நீங்கித் தனித்த ஓர் இடத்தை அடைந்து,தம்மைச் சுற்றிப் பலபோக்யப் பொருள்களை அமைத்துக்கொண்டு வசிக்கின்