பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

வலிமைக்கு மார்க்கம்.


நினைப்புக்களையும், மாசுள்ள நினைப்புக்களையும், அசந்தோஷ நினைப்புக்களையும் வெளியே அனுப்புங்கள்; நிந்தனைகள் உங்கள் மேல் சொரியப்படும் ; அச்சமும் கவலையும் உங்கள் தலையணையின் மீது வந்திருக்கும். உங்கள் நல்ல விதியையோ, தீய விதியையோ, ஆக்குகின்ற கர்த்தர்கள் நீங்களே. உங்கள் வாழ்க்கையை ஆக்குகிற அல்லது அழிக்கிற சக்திகளை நீங்கள் ஒவ்வொரு நிமிஷத்திலும் வெளியே அனுப்பிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் அகம் பெரியதாகவும் அன்புள்ளதாகவும் சுயநய மற்றதாகவும் வளரட்டும்; நீங்கள் தனத்தை அதிகமாக அடையாவிட்டாலும், உங்கள் செல்வாக்கும் வெற்றியும் பெரியனவாகவும் நிலையுள்ளனவாகவு மிருக்கும். உங்கள் அகத்தைச் சுயநயத்தின் சுருங்கிய எல்லைகளுக்குள் அடைத்துவையுங்கள் ; நீங்கள் கோடீசுவரர்களான போதிலும், உங்களுடைய செல்வாக்கும் வெற்றியும் முடிவில் மிக அற்பமாகக் காணப்படும்.


ஆதலால், நீங்கள் கலப்பற்ற பாநயத்தை வளர்த்து, அதனைத் தூய்மையோடும் தெய்வநம்பிக்கையோடும் ஏக காரியத்தோடும் சேருங்கள்; நீங்கள் நிலையான ஆரோக்கியத்தையும் ஸ்திரமான வெற்றியையும் மாத்திர மல்லாது, பெருமையையும் வலிமையையும் கொடுக்கும் அம்சங்களை உங்கள் அகத்தினின்று வெளிப்படுத்திக்கொண் டிருப்பீர்கள். உங்கள் தற்கால நிலை நீங்கள் விரும்பத்தகாததாகவும் உங்கள் மனம் உங்கள் வேலையில் செல்லாததாக


82