பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

ஆரோக்கியமும் வெற்றியும் வலிமையும்.


வன். வெறியர்களும், பயங்காளிகளும், ஆலோசனையில்லாதவர்களும், அற்பத் தன்மையுள்ளவர்களும் தத்தம் இனத்தோடு கூடி நிற்கட்டும்; இல்லாவிட்டால், துணையின்றிக் கீழே விழுந்து அழிந்துபோவார்கள்; ஆனால், அமைதியுள்ளவரும், பயமற்றவரும், ஆலோசனையுள்ளவரும், பெருந்தன்மையுள்ளவரும் வனமும், காடும், மலையின் உச்சியும் ஆகிய தனித்த இடங்களைத் தேடிச் செல்லட்டும். அவரது பலத்தோடு அதிக பலம் சேரும்; மனிதரை அழிக்கும் மனத்தின் ஓட்டங்களையும் சுழிகளையும் தடுத்து அவர் மேன்மேலும் வெற்றியடைவர்.



காமக்குரோதம் பலமன்று; அது பலத்தின் துர்விநியோகமும் உடைவுமாகும். காமக்குரோதம் ஒரு பலத்த பாறின் மீது வேகமாகவும் முரட்டுத் தனமாகவும் அடிக்கும் ஒரு கடும் புயலுக்குச் சமமானது ; ஆனால், பலம் அப்புயலுக்கெல்லாம் அசையாது மௌனமாய் நிற்கின்ற பாறுக்குச் சமமானது. மார்ட்டின் லூதர் என்பவர் வொர்ம்ஸ் என்னும் இடத்திற்கு க்ஷேமமாகப் போய் வரமாட்டாரென்று சந்தேகித்த அவரது நண்பர்கள் அவரை அங்குப் போகக் கூடாதென்று சொல்லிய காலத்தில், அவர் வீடுகளின் மேலுள்ள ஓடுகளைப் போல் எண்ணிறந்த பேய்கள் வொர்ம்ஸில் இருந்தாலும் நான் போயே தீர்வேன். என்று பதில் சொல்லியது உண்மையான பலத்தைக் காட்டுகின்றது. பெஞ் சாமின் தேஸரே என்பவர் பார்லி மென்டு சபை



85