பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஆரோக்கியமும் வெற்றியும் வலிமையம்.


பண்ணும் விகடம், முதலியவை யெல்லாம் வலிமையைக் கெடுப்பன என்று கருதி ஒழிக்கப்பட வேண்டும். செயின்டு பால் என்பவர் இபிசியின் ஜாதியாரைப் பார்த்து “பயனற்ற பேச்சும் விகடமும் நல்லவை யல்ல” என்று கூறியது, அவர் மனிதரது அபிவிர்த்திக்குரிய (பொறிகளுக்குப் புலப்படாத) சட்டங்களில் எவ்வளவு ஆழ்ந்த அறிவைக் கொண்டிருந்தாரென்பதை விளக்குகின்றது; ஏனெனில், அத்தகைய பழக்கங்களைச் சுபாவமாகக் கொண்டிருத்தல் சகல ஆன்ம பலத்தையும் வாழ்வையும் அழித்துவிடும். அத்தகைய மனச்சிதறல்களுக்கு நீங்கள் இடங்கொடாத திட்பமுடையவர்களான காலையில் நீங்கள் உண்மையான வலிமை இன்னதென்று அறிய ஆரம்பிப்பீர்கள். பின்னர், உங்கள் ஆன்மாவைப் பந்தப்படுத்தி, நீங்கள் வலிமையை அடைய விடாது தடுத்துக் கொண்டிருக்கின்ற உங்கள் அவாக்களோடும் பசிகளோடும் போராட ஆரம்பிப்பீர்கள் ; அதன் பின்னர், நீங்கள் மிக எளிதில் அபிவிர்த்தி அடைவீர்கள்.


நீங்கள் ஒரே நோக்கத்தை உடையவர்களாயிருங்கள்; எல்லாவற்றிலும் முக்கியமானதும் நியாயமானதும் பயன் தருவது மான ஒரு காரியத்தைக் குறித்துக்கொள்ளுங்கள் ; 'உங்கள் முழு மனத்தோடும் அதனைச் செய்யுங்கள். அது தவிர வேறு எதுவும் உங்கள் கவனத்தைக் கவரவிடாதீர்கள் ; "இரண்டு மனமுள்ள மனிதன் தனது பல காரியங்க


87