பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வலிமைக்கு மார்க்கம்.

ளிலும் நிலையில்லாதவனென்பது உங்கள் ஞாபகத்தில் இருக்கட்டும். கற்பதற்கு முந்துங்கள்; ஆனால், இரப்பதற்குப் பிந்துங்கள். உங்கள் வேலையைப் பூரணமாக அறிந்துகொள்ளுங்கள் ; அதனை நீங்களே, செய்து முடியுங்கள். உங்கள் அகவழிகாட்டியை, உங்கள் அக ஒலியை, நீங்கள் பின் தொடர்ந்து செல்லும் பொழுது, நீங்கள் வெற்றிமேல் வெற்றியை அடைவீர்கள், படிப்படியாக உயர்ந்த ஸ்தானங்களுக்குச் செல்லுவீர்கள். எப்பொழுதும் விரிந்து கொண்டிருக்கிற உங்கள் நுண்ணுணர்வு உங்கள் வாழ்க்கையின் முக்கிய நோக்கத்தையும் அழகையும் உங்களுக்குக் காட்டும். உங்கள் மனம் சுத்தமாய்விட்டால் ஆரோக்கியம் உங்களுடையதா யிருக்கும்; நீங்கள் தெய்வ நம்பிக்கையைக் கொண்டிருந்தால், வெற்றி உங்களுடையதா யிருக்கும்; உங்கள் மனத்தை நீங்கள் ஆண்டுவந்தால் , வலிமை உங்களுடையதா யிருப்பதோடு நீங்கள் செய்வதெல்லாம் அபிவிர்த்தி யாகும் ; ஏனெனில், நீங்கள் மனத்திற்கு அடிமையாகி மற்றைய உயிர்களினின்று பிரிக்கப்பட்ட தனிப்பொருளாயிருப்பதினின்று நீங்கி, நீங்கள் பிரபஞ்ச உயிராயும் நித்திய நன்மையாயும் விளங்காநின்ற மெய்ப்பொருளாகிய பெரிய சட்டத்திற்கு விரோதமாக ஒன்றுஞ் செய்யாது, அதற்கு ஒத்தவாறே எல்லாவற்றையும் செய்து, அதனோடு ஒருமைப்பட்டிருப்பீர்கள். நீங்கள் அடையும் ஆரோக்கியம் உங்களிடத்தில் நிலையாக நிற்கும்; நீங்கள் அடையும் வெற்றி 88