பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஆரோக்கியமும் வெற்றியும் வலிமையும்.



மனிதர் எண்ணிக்கைக்கு எட்டாததா யிருக்கும்; அஃது ஒரு பொழுதும் உங்களை விட்டு நீங்காமலிருக்கும்; உங்களுடைய செல்வாக்கும் வலிமையும் நாள்தோறும் அதிகமாய்க் கொண்டிருக்கும்; ஏனெனில், அவை பிரபஞ்சத்திற்கு ஆதாரமா யிராநின்ற மெய்ப்பொருளின் அம்சங்கள்.


ஆகையால், சுத்தமான ஓர் அகமும், ஒழுங்கு செய்யப்பட்ட ஓர் மனமுமே ஆரோக்கியத்தின் மர்மம்; அசையாத தெய்வநம்பிக்கையும், விவேகத்தோடு செய்யும் காரியமுமே வெற்றியின் மர்மம்; அவாவாகிய கருங்குதிரையை உறுதியான தீர்மானத்தோடு அடக்கியாள்வதே வலிமையின் மர்மம்.


89