பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரோக்கியமும் வெற்றியும் வலிமையும்.

அமைந்துள இடத்தைநாம் அடைந்துநின்
றழியா வீட்டினை அறிந்துணர லாமே.
தேடுவோ மாயின், தேடிய காண்போம்;
முயல்வோ மாயின், முயன்றன அடைவோம்;
இழப்போ மாயின்.இனிதுநாம் திருந்துவோம்.
நமதுதுன் பங்கள் நாசமுற் றொழிய,
நமதான் மாஒளி நல்வாழ் வடைய,
நாம்இவண் அழாது நகையுற வேண்டின்,
மெய்விதிக் கடங்கநாம் வேண்டும்;
நமையாள் மெய்விதி நமக்கடங் காவே.
சுயநயம் பிடித்த மயல்நெஞ் சுடையோர்
நற்பொரு ளெல்லாம் நமவென மொழிவர்;
நமதுநல் நோக்கம் நற்பொருள னைத்தையும்
தேடிக்காண்டலே, தெரிந்தினி துணர்தலே;
ஏனெனில், தூயரே ஞானவீ டடைகுவர்.
நமதெனச் சொலற்கும் நமதெனக் கொளற்கும்
ஒன்றுமே ஈங்கிலை ;உண்மை.நாம்
அறியவும் உணரவும் அனைத்துநம் முடையவே.

91