பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணவ ரியல்.

௨௧-ம் அதி.–எண்ணெழுத் தறிதல்.

எண்ணெனப் படுவ தெண்ணுநற் கணிதம். ௨0௧.
எழுத்தெனப் படுவ திலக்கிய மிலக்கணம். ௨0௨.
எண்ணு மெழுத்துங் கண்ணென மொழிப. ௨0௩.
எண்ணறி யார்பொரு ளெய்துத லரிது. ௨0௪.
எழுத்தறி யார்பிற வெய்துத லரிது. ௨0௫.
எண்ணெழுத் தறிந்தா ரெய்துவர் நான்கும். ௨0௬.
எண்ணு மெழுத்து மிடைவிடா தாள்க. ௨0௭.
அவைதாய் மொழிகொளி னதைமுன் பறிக. ௨0௮.
பின்பவை மிக்குள பிறமொழி யறிக. ௨0௯.
அறிவதைக் கசடற வறிந்துகொண் டொழுகுக. ௨௧0.

௨௨-ம் அதி.–தொழில் அறிதல்.

மெய்யுறுப் புக்கொடு செய்வது தொழிலே. ௨௧௧.
தொழிலா லுலகந் தோன்றிநிற் கின்றது. ௨௧௨.
தொழிலிலை யெனிலுல கழிவது திண்ணம். ௨௧௩.
தொழிலிலார் வறுமையுற் றிழிவெலா மடைவர். ௨௧௪.
அரியநற் றொழில்சில வறிதல்யார்க் குங்கடன். ௨௧௫.
படைக்கல மனைத்தும் பண்பொடு பயில்க. ௨௧௬.
படைவகுத் தமர்செயு நடையெலா மறிக. ௨௧௭.
புவிகடல் விண்மிசை போவவூர்ந் தறிக. ௨௧௮.
எவ்வகை யுருவு மெடுத்திடப் பழகுக. ௨௧௯.
உழவுவா ணிகங்கைத் தொழில்சில வறிக. ௨௨0.


13