பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இல்வாழ்வியல்.

௪௯-ம் அதி.–இடுக்க ணழியாமை.

இடுக்கண் டுயரினைக் கொடுக்குமிடை யூறு. ௪௮௧
இடுக்க ணுற்றுழி நகினது தான்கெடும். ௪௮௨
இடுக்க ணுக்குள நெகினது பெருகும். ௪௮௩
இடுக்கண் புறத்துள தென்பது பொய்ம்மை. ௪௮௪
இடுக்க ணகத்துள தென்பது மெய்ம்மை. ௪௮௫
இடுக்க ணகத்ததென் றெண்ணவஃ தழியும். ௪௮௬
இடுக்கணி லழியா ரிடுக்க ணழியும். ௪௮௭
இடுக்கண் வலியினைக் கொடுக்குந் திறத்தது. ௪௮௮
இடுக்க ணறிவினை யீயு மியலது. ௪௮௯
இடுக்கணிற் றளரா ரெண்ணிய முடிப்பர். ௪௯0

௫0-ம் அதி.–பற்றுளம் விடுதல்.

பற்றுளம் பொருளினிற் பற்றுள நெஞ்சம்; ௪௯௧
ஈயா துண்ணா தெண்ணிவைத் திவறல். ௪௯௨
பற்றுள மரில்பல வற்றுளும் பெரிது. ௪௯௩
பற்றுளம் பல்வகைக் குற்றமு நல்கும். ௪௯௪
பற்றுளத் தாலருஞ் சுற்றமு நீங்கும். ௪௯௫
பற்றுளத் தார்பொருண் முற்று மிழப்பர்; ௪௯௬
அறம்புக ழின்பமெய் யறிவுவீ டிழப்பர். ௪௯௭
பற்றுளம் விடுத்தவர் பாரெலாங் கொள்வர்; ௪௯௮
அறம்புக ழின்பமெய் யறிவுவீ டடைவர். ௪௯௯
பற்றுளப் பேயினைச் செற்றுடன் றுரத்துக. ௫00


27