பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்யறம்

௭௯-ம் அதி.–அர ணமைத்தல்.

அரணிலார்க் கரசிலை யரசிலார்க் கரணிலை. ௭௮௧
அரணன் கமைந்திடி னரசெலாங் கொள்ளும். ௭௮௨
அரணன் கமைத்தலோ ரரும்பெருஞ் செயலே. ௭௮௩
அரணெலா முரியரா லமைத்திடல் வேண்டும். ௭௮௪
புறவர ணான்கையும் பூரண மாக்குக. ௭௮௫
நாட்டி லகவர ணலம்பெற வியற்றுக. ௭௮௬
அவற்று ளகழ்மதி லரசில மாக்குக. ௭௮௭
புறவக நெறிகளைத் திறனுடன் பொருத்துக. ௭௮௮
அவைகணத் தடைக்கவும் திறக்கவும் வேண்டும். ௭௮௯
நெறியுள விடனெலாம் பொறிகளை நிரப்புக. ௭௯0

௮0-ம் அதி.–அர ணளித்தல்.

அரண்படை யளிக்குமஃ தளிப்பது படையே. ௭௯௧
நீரி லரும்படை நெடுங்கல நிறுத்துக. ௭௯௨
நிலத்தி லருந்தொழில் வலப்படை நிரப்புக. ௭௯௩
மலைமதில் களிலரு வினைப்படை நாட்டுக. ௭௯௪
காட்டுட் பகைகொலுங் கரவெலா மாக்குக. ௭௯௫
அரணுட் புறனெலா மாம்விளை வாக்குக. ௭௯௬
உடைபடைக் கலமெலாந் தடைவரா தியற்றுக. ௭௯௭
அவரவர் வசிப்புக் காமில மாக்குக. ௭௯௮
அகழ்மதில் சூழிலத் தரசினம் வாழ்க. ௭௯௯
அகவரண் களையர சநுதினங் காண்க. ௮00


42