பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்யறம்

௯௧-ம் அதி.–நட்பு.

நட்பெனப் படுவது பெட்புறு கேண்மை. ௯0௧
அதுநன் மகாருளத் தலரு நன்மலர். ௯0௨
அதனிய லடுத்தவ ரகநக விரும்பல்; ௯0௩
இடித்துக் கூற லிடுக்கண் களைதல். ௯0௪
புணர்ச்சி பழகுத லுணர்ச்சியா னட்பாம். ௯0௫
ஆய்ந்துநன் னட்பறிந் ததன்பின் கொள்ளுக. ௯0௬
ஆய்ந்தறி யாதுறல் சாந்துயர் தருமே. ௯0௭
மருவிப் பன்னா ளொருவா தாய்க. ௯0௮
வாய்க்கா லனைய மாந்தரை நட்டல். ௯0௯
சூட்டுக் கோனிகர் துணைவரைக் கொள்க. ௯௧0

௯௨-ம் அதி.–பழமை.

பழமையெத னாலுங் கிழமைகுன் றாதது. ௯௧௧
அஃதுயர் நட்பி னருங்கனி யாகும். ௯௧௨
பழமையி னின்பம் பயப்பதொன் றில்லை. ௯௧௩
பழயவர் பிழைப்பினும் பழமைமா றற்க. ௯௧௪
அழிவந்த செய்யினு மன்பறா ராகுக. ௯௧௫
பழமையை மறப்போர் பாம்பினுங் கொடியர். ௯௧௬
அலக்கணுங் கேடு மழிவு முறுவர். ௯௧௭
பழமையை விடாரைப் பாரும் விடாது. ௯௧௮
பழையார்ப் பிரியாரை விழையாரும் விழைப. ௯௧௯
பழமையைப் புதுமையிற் பார்ப்போர் பெரியர். ௯௨0


48