பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல்.

௯௩-ம் அதி.–ஆகா நட்பு.

ஆகா நட்பிவ ணழிவுபழி தருவது. ௯௨௧
அவைநனி தருபவ ரறிவில் பேதையர்; ௯௨௨
உறுவதே தூக்குஞ் சிறுமைமிகு மாந்தர்; ௯௨௩
வினையொடு தஞ்சொல் வேறுபடு வஞ்சகர்; ௯௨௪
ஒல்லுங் கரும முஞற்றாக் கள்ளர்; ௯௨௫
மிகைபல விழைத்து நகைசெய்யும் பகைவர்; ௯௨௬
பக்கத் துறைந்து பதம்பார்த் திருப்பவர்; ௯௨௭
அட்டைபோ லொட்டிநின் றரியவை கவர்வோர்; ௯௨௮
கள்ளுங் கவறுங் கைவிடாப் பதகர்; ௯௨௯
விடருந் தூர்த்தரு நடருமுள் ளிட்டோர். ௯௩0

௯௪-ம் அதி.–இகல்.

இகலெனப் படுவ துளமாறு பாடு. ௯௩௧
நகறரு நட்பிற் கிகன்மறு தலையாம். ௯௩௨
அதனிய லடுத்தவ ரழமனம் விரும்பல்; ௯௩௩
இடருற மொழித லிடுக்கண் புரிதல். ௯௩௪
எதிருணர் வழுக்கா றிறுகுளத் தால்வரும். ௯௩௫
இகலுள மென்று மெரிந்து துன்புறும். ௯௩௬
அன்போ தட்பமோ வின்போ வுறாது. ௯௩௭
இகல்பா ராட்டுவார் தகல்காண் பரிது; ௯௩௮
அருமைச் சுற்றமு மாக்கமு மிழப்பர்; ௯௩௯
கேடு மழிவுங் கிளைகளாக் கொள்வர். ௯௪0


49

7