பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்யறம்

௧௨௩-ம் அதி.–மெய்யின் விளக்கநிலை.

விளக்க நிலைமெய் விளங்கு மறிவு. ௧௨௨௧
அடக்கமெய் விறகு ளடங்கிய தீப்போன்ம். ௧௨௨௨
விளக்கமெய் கடைய விறகெழுந் தீப்போன்ம். ௧௨௨௩
ஐயறி வுயிர்களின் மெய்யொளி யடங்கும். ௧௨௨௪
ஆறறி வினரு ளவ்வொளி விளங்கும். ௧௨௨௫
அவர்மறஞ் செயச்செய வதனொளி குன்றும். ௧௨௨௬
அவரறஞ் செயச்செய வதனொளி பெருகும். ௧௨௨௭
அவரொழுக் கறிந்தபோழ் தஃதக விளக்காம். ௧௨௨௮
அவரொழுக் கடைந்தபோழ் ததுமலை விளக்காம். ௧௨௨௯
ஒழுக்கில்வாய் ஞானமஃ தொழிக்குங் காற்றாம். ௧௨௩0

௧௨௪-ம் அதி.–மெய் யுணர்தல்.

ஒழுக்க முடையா ருணர்வர் மெய்யை. ௧௨௩௧
அறநூ லெண்ணில வறைந்துள வொழுக்கம். ௧௨௩௨
அவற்றைவிட் டயலுற றவற்றைப் புரிதலாம். ௧௨௩௩
அடிவிட் டேணியி னந்தமே றுவரோ? ௧௨௩௪
அறநூல் கற்றுநின் றான்மநூ லாய்க. ௧௨௩௫
ஓருட லளவி லுறுமறி வான்மா. ௧௨௩௬
அணையுள குளநீர்க் கான்மா விணையாம். ௧௨௩௭
ஆன்மா மெய்யொன் றாணவம் வேற்றுமை. ௧௨௩௮
அறஞ்சே ரொழுக்கா லாணவங் களைக. ௧௨௩௯
உண்மை மெய்யான்மா வுலகுமெய்த் தோற்றம். ௧௨௪0


64