உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறப்புப் பாயிரம்

மெய்யற மியற்றினோன் வையமோர் சிதம்பரம். ௧
வள்ளுவ ரெல்லையிம் மறைக்கு மெல்லையாம். ௨
மடியருங் கேட்கவோ ரடியால் யாத்தனன். ௩
நுதலிய தறவழி முதனிலை யடைதல். ௪
அறம்பொரு ளின்பம்வீ டடைதல் பயனே. ௫
விரோதி கிருதுவில் விளம்பப் பெற்றது. ௬
கண்ணனூ ரரண்மனை யெண்ணியாத் திடுகளம். ௭
ஆன்றமா தேவ னகமரங் கேற்றிடம். ௮
ஏழையுங் கற்குமா றியற்றப் பட்டது. ௯
மெய்யற மென்றும் வையகத் துலாவுக. ௧0