பக்கம்:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
8

இருக்கும். காலா (Bamin), கவலை (Sardine), அல்லது கிழங்கான் (Whiting) என்னும் மீன்களுக்குள்ளது போல கடினமான எலும்புகள் இராது. அதின் வாலின் உருவமும் ஒரு வினோதமாயிருக்கும்.

சாதாரண சுறாமீனின் உருவமும், வளைந்து வளைந்து நீரில் ஓடும் தன்மையும் பார்ப்பதற்கு அழகாயிருக்கும். ஆனால் சாதாரணமாய் அதின் நிறம் கடல் நாகங்களுக்குள்ளது போல் முதுகில் பல நிறம் பட்ட சாம்பல் நிறமாகவும், வயிற்றில் வெள்ளையாகவும் இருக்கும். ஆனால் சாதாரணமாய் சிறிய சுறா மீன்களுக்குக் கொட்டடி கொட்டடியாகவும் வரி வரியாகவும் இருக்கும். கோம்ராசி என்னும் (Tiger Shark) புலி சுறாவானது 15 அடி நீளம் நீண்டு வளரும். அவைகள் இளைமையாயிருக்கும் பொழுது கறுப்பு வரிகள் பட்டைபட்டையாய் அதிக வினோதமாக இருக்கும். சுறாமீன்களில் அதுதான் அதிக அழகானது. கொம்பன் சுறா என்றும் ஒரு வினோதமான மீன் இந்தக்கடல்களில் சாதாரணமாய் அகப்படும். சிலவேளைகளில் சிறு கொம்பன் சுறாக்கள் வலைகளில் அகப்பட்டுக்கொள்ளுகின்றன. அச்சமயங்களிலே இக்குளத்தில் கொம்பன் சுறாவைக்காணலாம். அதற்கு அந்தப்பெயர் உண்டான தற்குக்காரணம் வெளிப்படையாக இருக்கிறது, அதின் தலையின் இருபக்கமும் நான்கு மூலையாக வளர்ந்து கண்களும் வெளியில் பிதுங்கி இருக்கும். சிலவேளைகளில் 7 அடி நீளமுள்ள பெரிய மீன்களும் அகப்படுகின்றன. இம்மீன்கள் அதிக மூர்க்கத்தனமுள்ளதும், மனிதர்களைச் சாப்பிடக்கூடிய தென்றும் சொல்லப்படுகின்றன.

திருக்கை மீன்கள் தங்களுடைய விசாலமான வட்டமுள்ள தேகத்தை கடலின் கீழ் பூமியின் மட்டத்தில் பதியவைத்து வசிக்கும். அந்த மீன் உயிரோடிருக்கும் பொழுது அதன் முதுகு, மணல் நிற முடையதாயிருக்கும். ஆகையால் அவைகள் அசைவற்றிருக்கும் பொழுது, அவைகளைக்கண்டுபிடிப்பது கஷ்டம். அவற்றில் சில வகை மீன்களுக்கு முதுகில் பிராகாசமுள்ள நீலப்புள்ளிகள் பரவியிருக்கும். வேறு சில மீன்களுக்கு முதுகில் பலவித குறிகளும் சலவை கல்கள் போன்ற நிறங்களுமிருக்கும். அது ஒருவேளை அடிக்கடி போய் வரும் கடலின் ஆழத்திலுள்ள பூமியின் நிறத்தை ஒத்து இருக்கலாம். கூழாங்கற்கள் இருக்கிற தரையாவது அல்லது அடையாக ஒட்டியிருக்கும் கூட்டமான பாசிகளாவது அல்லது சங்குகளாவது நிறம்பியிருக்கிற தரையாயிருந்தாலும், அதின் நிறத்தோடு கலந்த கறுப்பு அல்லது வெள்ளை நிறமும் மீன்களுக்குண்டாகிறது. இந்த திருக்கை மீன்களில் ஒருவினோதமான வகை திமிலை அல்லது மின்சார திருக்கை (Torpedo Ray). அதற்கு அப்பெயர் வந்ததற்கு காரணம் என்னவெனில் அம்மீனைத்தொட்டால், மின்சாரம் தொடுபவர் உடம்பில் பாய்வதினால்தான். திமிலை பெரியதாகயிருந்தால் அதை தொடும் பொழுது அந்தக்கை முழுதும் சற்று நேரம் உணர்வற்றிருக்கும்படியாக மின்சாரம் ஏறும். சாதாரணமாய் மேஜையில் சிறு குளத்திலுள்ள 6 அல்லது 8 அங்குலமுள்ள சிறிய மீன்களை தொட்டால் சந்தோஷம் உண்டாகக்கூடிய ஒருவிதமான உணர்ச்சி