பக்கம்:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16


பச்சைக்குறவான் மீன் அதிக அழகுள்ள மீன். அதின் பற் கள சிவந்திருக்கும். அதின் வால் இரகுகள் நீண்டு வளைந்திருக்கும்.


பச்சைக்குறவான்.

அது அடியில் படுத்துக்கொள்ளும்பொழுது ஒருபக்கம் ஒருக்கணித்துத்தங்கும். இக்குறவான் மீன்களில் அதிக சிறிதாயிருக்கும் மஞ்சள் வரிக்குறவான் மீன்கள், தங்கள் இனத்துடன் அதிகமாய்ச்சண்டைபோடும் தன்மையுள்ளன. ஒரு குளத்தில் இரண்டு மீன்களிருந்தால் (ஆண்மீன்கள் ) ஒன்றோடொன்று சண்டையிட்டு மாண்டுபோகின்றன. அவைகள் தங்களை விட மிகப்பெரிய மீன்களோடு போரிட்டு அவைகளைக் கொல்லுகின்றன. உதாரணமாய், சமீபத்தில் ஒரு அடி நீளமுள்ள ஒரு இளமையான கோமராசியை (Tiger shark) இம்மீன் ஒன்று கொன்றுவிட்டது

 நெடுக்கில் பட்டை வரியுள்ள வேறு மீன்களுக்கு பலிங்கிச்சான் என்று பெயர். அது கடலிலிருக்கும் ஒரு சிறிய மீன். சென்னைக்குச் சமீபத்தில் கடலிலும், சடலையடுத்த நீர்க்கிடையிலும் சாதாரணமாய் இருக்கும். அது உருவத்திற்சிறிதாயிருந்தாலும் தொகையில் அதிகமாகயிருக்கிறது; அது அதிக விலைபெறாத மீன். அதுகாரணம் பற்றியே அது ஏழைகளுக்கு முக்கிய ஆகாரமாயிருக்கிறது. 

நெ. 5, குளம்.

இக்குளத்தில் பலவிதமாய்ச்சம்பந்தமுடைய அழகான ஒருமீன் கூட்டம்வைக்கப்பட்டிருக்கின்றது. மிகவும் அழகானதும், பிரகாச மான நிறத்தையுடையதுமான ஒரு மீன் கொண்டங்கரவான் என்று பெயருள்ளது. அது, சென்னைக்கு அருகாமையில் சாதாரணமாய் அகப்படுகிறது. ஆனால் அது தூத்துக்குடியில் காணப்படுவதில்லை. அது முதலில் கொண்டுவரப்பட்டபொழுது, அதின் நிறம் மிக அழகாய் இருந்தது. துல்லியமான வெள்ளை தேகத்தில் இளம் சிவப்பு வரிகள் குறுக்கே ஓடியிருந்தது. கொஞ்சகாலம் சென்றபின், இளஞ் சிவப்பு, மங்கி ரோஜா வர்ணமாகிறது. அப்படியும், வெண்மை நிறத்தோடு மாறுபட்டு அழகாயிருக்கிறது. அவைகள் கோபமூட்டப்