பக்கம்:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

தொந்தரவுபடுத்தாமலிருந்தால் வியாதிப்பட்டுசாகின்றன. இப்படி சாகிறதற்கு முக்கியகாரணம் மூச்சுவிடபோதுமான காற்றின்மையால்தான். ஆனால் சாதாரணமாய் கண் பிதுங்கியுள்ள மீனைக்கண்டால் சில விதமான மீன்கள் உடனே அதைத்தாக்கி அந்தக்கண்ணைப் பிடிங்கி, கூடுமானால் அம்மீனையும் கொன்றுவிடுகின்றன. கடலில் உள்ள ஜந்துக்களுக்கு மரணம் உண்டாசாமல் காப்பாற்றுவதற்கு வைத்திய சாலைகளாவது, வயதான ஜந்துக்கள் இருக்கும் 'பஞ்ரா போல்களாவது ' இல்லை. அதனால் தான் கடலில் அங்கஹீனமான வியாதிப்பட்ட ஜந்துக்களை ஒருவன் காண்பதரிது. அங்கே சவுக்கியமும் பலமும் உள்ள பிராணிகள் தான் வசிக்கமுடியும்.

மின்சாரவிளக்கு வைத்திருப்பதால் இருட்டினவுடன், குளங்க ளெல்லாம், மிகப்பிரகாசமாய் வெளிச்சம் உண்டாகி விளங்குகின்றன. அது யாவரும் கொண்டாடத்தக்க புது ஏற்பாடு. சில விஷயங்களில், பகல் வெளிச்சத்திலிருப்பதைப் பார்க்கிலும், மீன்களெல்லாம், இந்த வெளிச்சத்தில் அதிக அழகாய்க்காணப்படுகின்றன. கதவின் வழியாயும், பலகணிவழியாயும் பகலிலே வருகிற அதிகப்பிரகாசமாயுள்ள, சூரிய காந்தியால் உண்டாகும், மீன்காட்சியின் அழகை கெடுக்கும் நிழல்களும் பிரதிபிம்பங்களும் இதில் இல்லை. மேலும், மின்சார கூண்டுகளை, (bulbs) குளங்களில் எப்பக்கத்தில் வெளிச்சம் வேண்டுமோ அதற்குத் தகுந்தபடி திருப்பிக்கொள்ள லாம். இவ்வித செயற்கை வெளிச்சம் எவ்வளவு பிரகாசமாக இருந்த போதிலும் மீன்களுக்கு அது ஒத்து இருப்பதாய் தெரிகிறது.

அங்கே வைக்கப்பட்டிருக்கிற மீன்களெல்லாம் அருகாமையி லுள்ள கடலில் பிடிக்கப்பட்டவைகள் தான். அக்கூட்டத்தில் பல வகைகள் இருந்தபோதிலும் அது சென்னையில் உள்ள ஜலங்களில் வசிக்கும் தினுசுகளில் ஒரு சிறுபாகந்தான் இருக்கும். உல்லம் (Hilsa), கவலை (Sardines) கானாங்கெளுத்தி (Mackerel) முதலிய மீன்களையொத்த அனேகவகைகள் அதிக மென்மையாய் இருப்பதினால் பிடித்து குளத்தில் விடுவதற்குள் மாண்டுபோகின்றன. மற்றவைகள் பார்வைக்கு அழகாயிருப்பதில்லை ; அல்லது கொண்டுவந்து வைப்பதற்கு அதிக பெரிதாக இருக்கின்றன. அகப்படக்கூடிய நல்லதினுசு மீன்களை யெல்லாம் கொண்டுவந்துவைத்துக் காண்பிப்பதற்கு இடம் போதாமலிருக்கிறதால் ஐரோப்பாகண்டத்திலுள்ள செய்குளங்களில் வைக்கப்பட்டிருக்கும் அனேகவித மீன்களை வைப்பதற்கு இடம் இல்லாமலிருக்கிறது. இந்திய கடல்களிலிருந்து வேடிக்கையான வர்ணங்களையுடையவும், வினோத உருவங்களையுடையவுமான நண்டுகளும் (crabs), வினோதமான முட்களையுடைய சிங்கார இரால்களும் (lobsters), இரண்டடி நீளமுள்ள மீசைகளையுடைய இரால்களும் (prawns), ஊதாவர்ண வரிகளும் மஞ்சள் வர்ண வரிகளும் வரிசையாயிருக்கும் கடல் அட்டைகளும், சிவந்த வர்ணமான நக்ஷத்திர மீன்களும், விஷமுள்ள கூர்மையான முட்கள் நிறைந்த தலைப்பாகத்தையுடைய கடல் பல்பம் பூச்சி யென்னும் மூரல்களும், சொறிகளும் (jelly-fishes), ஆழமான கடல் நிறத்தை பொத்த, ஊதாநிறமுள்ள நெட்டி முதலிய சைபனோபோர்களும் (Siphonophores), ஆழமான கடலில் உயிருள்ள சிருகுமிழிகளால்