பக்கம்:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
நெ.1, குளம்.

இந்திய சமுத்திரங்களில் அநேக தினுசு கடல் பாம்புகளிருக்கின்றன. அவைகளெல்லாம் அதிக விஷமுள்ளவைகள். நாகப் பாம்பின் விஷத்தைவிட அவைகளின் விஷம், அதிக மோசமானது. நல்லவேளையாய் அவைகள் சோம்பற்றன்மையுள்ளவைகள். அவைகளை மிதித்தால் அல்லது தொந்தரை செய்தால்தான் மனிதனைக் கடிக்கும், இல்லாவிட்டால் கடிக்கிறதில்லை. ஏனெனில் தங்களை காப்பாற்றிக்கொள்ள பயந்து தங்களுடைய கொடிய விஷத்தை உபயோகப்படுத்துகின்றன. மனிதர்களில் சிலர் இவ்விஷத்தால் மரண மடைகிறதற்குக்காரணம், காலில் ஒன்றுமில்லாமல், இப்பாம்புகள் அதிகமாயுள்ள, பவளக்குளங்களில் ஆழமில்லாத இடங்களில் அசாக்கிறதையாய் நடந்து போகிறதினாலேதான்.

கொஞ்சகாலத்திற்கு முன்வரையிலும் இந்தக்குளத்திலுள்ள கடற் பாம்புகளோடு பின்னர்ப்பாம்பு (Sea-eels) சிறு சுறாக்கள் முத லியவைகளும் சேர்த்துவைக்கப்பட்டிருந்தன. அவைகளெல்லாம் ஒன்றோடொன்று சமாதான மாய்த்தான் வாழ்ந்திருந்தன. ஆனால் மந்தபுத்தியுள்ள பாம்புகள் இரைதேட நினைக்குமுன் அதிக சுறு சுறுப்புள்ள அவற்றின் கூட்டாளிகள் அகப்படும் இரைகளை விழுங்கி விடுவார்கள். ஆகையால் பாம்புகளுக்கு தகுந்தபடி இரை கிடைப்பதில்லை. இப்பொழுது, கடல் பாம்புகளுக்கு அந்தக்குளம் முழுதும் தனியே விடப்பட்டிருக்கிறது. இப்பொழுது அவைகள் தாராளமாய் இரை சாப்பிட்டு வருகின்றன. அவைகள் அப்புகுட்டி (Suckerfish) போன்ற மீன்களில் உயிரோடுள்ள பிராணிகளைத்தான் ஆகார மாய்த்தேடுகின்றன. ஒரு பாம்பு சமயம் வாய்த்தால் தன்னுடைய இரையை வால்பக்கம் பிடிக்கிறது. அதனுடைய பற்கள் மீனின் சதையில் பொத்துக்கொள்ள, அதே நேரத்தில் இரண்டு நிமிஷத்திற் குள்ளாக அம்மீன் வலிப்புவந்தது போல் சுருண்டு உடனே இறந்து விடுகிறது, தான் பிடித்த பிடியை விடாமல் அந்த பாம்பானது கொஞ் சங்கொஞ்சமாய் மீனைத்தனது வாய்க்குள் வரும்படி செய்து, மீனின் தலை வந்த உடன் அதன் வாயை அகலமாய்த்திறந்து மீனில் எவ்வளவுபாகம் தன் தொண்டை வழியாய் இரைப்பைக்குள் போகுமோ அவ்வளவையும் சாப்பிட்டுவிடுகிறது. மீன் பெரிதாக இருந்தால் இந்த மீனை அது விழுங்குவதற்கு அதிக நேரமாகும். அனேக தடைவையில் பாம்பு அதனவ்வளவு பெரிதாயிருக்கும் மீன் களைக்கூட கொன்று தின்னப்பார்க்கிறது. இப்படி விழுங்கும் பொழுது மீனின் வாய் பாம்பின் வாயிலிருந்து வெளியில் பிதுங்கிக் கொண்டு இருக்கின்றது. அவைகளுக்குக் கவலை (Sardines) என்னும் மீன்களைத் தின்பதில் அதிக ஆசை. ஆனால் பொதுவாய் துடுப்புகளில் முள் அதிகமாயுள்ள மீன்களைச்சாப்பிடுவதில்லை.

அதனுடைய தோலின் நிறம் அவ்வளவு பிரகாசமாயிராது. ஆனால் அதிக விஷமுள்ள கடல்சாரை என்னும் பாம்பிற்கு கறுப்பும் பொன்னிறமுமாகக்கலந்து அதிகப்பிரகாசமாய் விளங்கும். இது சாதாரணமாய் "எச்சரிக்கும் நிறம்" என்று நம்பப்படுகிறது. அதாவது மீன்களை ஆகாரமாய்த்தின்று வசிக்கும் பெரிய மீன்களுக்கு இவ்வர்ணத்தையுடைய பிராணிகள் அதிக அபாயகரமான பிராணிக