பக்கம்:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

6

ளென்று தெரிவிக்கும் ஒரு குறியாம். இந்த நிறத்தின் பிரயோஜனம் பரஸ்பரமாக இருக்கிறது. ஏனெனில் இரண்டு பிராணிகளையும் உயிரையிழக்காமலிருக்கச்செய்கிறது. எப்படியெனில் ஒரு சுறா அல்லது விலாங்கு பாம்பை விழுங்கிக்கொன்றுவிடலாம். ஆனால் அந்தப்பாம்பு, தான் சாகுமுன் தன்னுடைய விஷத்தை தன்னை விழுங்கின மீனில் ஏற்றிவிடும். கடல் பாம்புகளின் தேகத்தின் மேல் அனேக பலதினுசு ஒட்டு சிப்பிகள் அநேகமாய் வந்து தங்கிக்கொண்டு அப்பாம்புக்குத் துன்பம் செய்கின்றன. இவைகள் எகாரன் (acorn) போன்ற கடலோரமாய் இருக்கும் குன்றுகளில் ஜலம் அதிகமாய் எட்டக் கூடிய இடத்தில் காலில் ஒன்றும் இல்லாமல் நடந்து போகிறவர்களுக்கு அதிகதுன்பத்தை உண்டாக்குகிற ஒட்டு நத்தைகளுக்கு, இனமானவைகள், அவைகள் கும்பம் போன்ற நத்தைகளைப்போல் காணப்பட்ட போதிலும் (கும்ப மீன் என்றால் நத்தையின் ஓடு, அடிப்பக்கம் வெட்டப்பட்டிருக்கும்) உண்மையிலே அவைகள் இரால், சின்னக்கூனிவகைராக்களைச் சேர்ந்தவைகள். ஏனெனில் அவைகளும் மீன் ஆராய்ச்சி நூலில் கிரஸ்டேஷிய (Crastacea) என்னும் வகுப்பைச் சேர்ந்தவைகள்தான். எகாரன் (acorn) நத்தைகளில் இளமைப்பருவமுள்ளவைகள் கடலில் சில நாட்களுக்குத் தாராளமாய் நீந்தித் திரிந்து பின்பு "பார்", கடல் பாம்பு, ஆமை, அல்லது திமிங்கலத்தைப்போல அழுத்தமாயுள்ள இடங்களில், தங்கி அங்கே பிடிப்பாயிருக்கின்றன. பின் ஆயுள் முழுதும் அந்த இடத்திலேயே கழிக்கின்றன. இவைகள் எதேச்சையாய் கடலிலே சுற்றி திரிவதைவிட்டு வேறொரு பிராணியின் தேகத்தில் போய்த்தங்கி சவுக்கியமாயிருப்பதை தேடிக்கொள்ளுகின்றன. அப்படித்தங்கினால் அந்தப்பி ராணி ஜலத்தில் ஓடும்பொழுது அதில் அசையாமல் வந்து ஒட்டிக் கொண்டுள்ள நத்தை ஜலத்தில் இருக்கும் ஆகாரங்களைச் சாப்பிட ஏதுவாயிருக்கிறது. அதுபோலவே அடித்தண்டுள்ள ஒட்டு நத்தைகள், வெகு தூரம் சென்றுவந்த கப்பலின் அடியில் லக்ஷக்கணக்காய் ஒட்டியிருக்கும், யாவரும் அறிந்த, கப்பல் நத்தைகளுக்கு இனமானவைகள்.

ஆமைகளையும், திமிங்கலங்களையும் பார்க்கிலும் கடற்பாம்பிற்கு ஒரு அனுகூலமிருக்கிறது. அக்கடற்பாம்புகளுக்கு இந்த நத்தைகளை அடிக்கடி விலக்கி விடுவதற்கு சமயம் வாய்க்கிறது. ஏனெனில் கடல் பாம்புகளும் கரைப்பாம்புகளைப்போல அப்போதைக்கப் போது தோலுரிக்கின்றன. தோலுரியும் சமயத்தில் கடற்பாம்பானது அதிக சுறுசுறுப்பில்லாமல் நீர் மட்டத்திற்குக் கீழே மிதந்துக்கொண்டு போகிறது. கடல்பாம்புகள் கரைப்பாம்புகளைப்போல முழுத்தோலையும் ஒரே தடவையில் உரிக்காமல் பழயதோலை துண்டு துண்டாக உரிக்கின்றன,


நெ. 2, குளம்

இக்குளத்தில் பலவித சுறாமீன்களும், சிறு சுறா மீன்களும், திறுக்கை மீன்களும் (Rayish), விலாங்கு இனத்தைச் சேர்ந்த பாம்பு போன்ற மீன்களும் வைக்கப்பட்டிருக்கின்றன.