பக்கம்:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

7

உஷ்ணபாகத்தைச் சேர்ந்த கடல்களில் அனேக விதமான சுறா மீன்கள் இருக்கின்றனவென்பது எல்லாருக்கும் நன்றாய்த்தெரியும். அவைகளில் சில அதிகப் பெரிதாக வளர்கின்றன. நல்லவேளையாய் மனிதனைச்சாப்பிடும் வகைகள் கடலில் ஸ்னானம்பண்ணுகிற இடங் களில் கரையோரமாகவருகிறதில்லை. அவைகள் சாதாரணமாய் அதிக ஆழ்ந்த கடலில் தான் இருக்கும். ஆனால் நதிகள் முகத்துவாரங்களிலும், துரை முகங்களிலும், புகைக்கப்பல்கள் அடிக்கடி நங்கூரம்போடும் இடங்களிலும் அவைகள் வருவதுண்டு. ஏனெனில் அவைகளுக்கு அங்கே அதிக ஆகாரம் அகப்படுகின்றது. மிகவும் பெரிய அபாயகரமான சுறா மீன்கள், எல்லாவற்றையும் சாப்பிடும். அவைகள் ருசியுள்ளவைகளைத்தான் சாப்பிடவேண்டுமென்று பத்தியம் பார்ப்பதில்லை. ஒரு சமயத்தில் ஒரு சுறா மீன் வயற்றில் ஏராளமான பக்ஷி இறகு இருக்கக்கண்டேன். அது நிச்சயமாய் இறகுவைத்த தலையணையைத்தின்றிருக்க வேண்டும். சிறு வகுப்புச்சுறாக்கள் தங்கள் ஆகாரமாக சிலவித பிராணிகளையே விரும்புகின்றன. சில, நண்டுகளை மட்டும் சாப்பிடுகின்றன; வேறு சில, நத்தைகளையும், சிப்பிகளையும் சாப்பிடுகின்றன. இம்மீன்களிலெல்லாம் சில வித கிருமிகள் இருக்கின்றன. இவைகளில் முக்கியமானது நாடாப் புழுக்கள் (Taps-worm). இந்த புழுக்கள் தாங்கள் இருக்கும் பிராணிகளின் குடல்களின் பக்கங்களில் அனேக விதமாய் கெட்டியாய்ப்பிடித்துக்கொள்ளுகிற விதங்களைப்பற்றி புஸ்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. கொக்கிகள், உறிஞ்சும் பில்லைகள், சதையில் புதைக்கப்பட்டிருக்கும் உருண்டைதலைப்புகள் ஆகிய இவைகள் தான் உபயோகப்படுத்தப்படும் முக்கியமான உபாயங்கள். அவைகள் பலவேறுபட்டன. அவை எதற்காக ஏற்படுத்தப்பட்டனவோ அதற்கு பொருத்தமாயிருப்பது மிக ஆச்சர்யப்படத்தக்கதாகயிருக்கும். மிருக சாஸ்திரிகளால் இந்த ஜந்துக்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பெயர்களோ அப்பிராணிகளிடத்திருக்கும் வினோதமான வஸ்துக்களைக் கவனித்துப் பார்க்கையில் அதிக ஆச்சர்யப் படத்தக்கவைகளாயிருக்கின்றன. ஆர்னில்லோபோத்திரியும் கோப்ராபார்மிஸ் (Hornellobothrium cobrafornis) அல்லது மைசோபைலோபோத்திரியம் (Myzophyllobothrium) என்று பெயரிட்டிருப்பதை யோசித்துப்பாருங்கள்.

ஆனால் மறுபடியும் சுறா மீன்களையும் அவற்றின் வகைகளையும் கவனிப்போம். இவைகள் மீன்களுக்குள் தனியாகவும் நன்றாய் தெரிந்துக்கொள்ளக்கூடிய ஒரு வகுப்பாயிருக்கின்றன. இந்த மீன்களக்கும் மற்றவைகட்கும் வித்தியாசம் என்னவெனில், இந்த மீன் கவுக்குக் கழுத்திற்கு இரண்டு பக்கத்திலும் மூச்சு விடுவதற்காக ஏற்பட்டதுவாரங்களாகிய செவிள்கள் வரிசையாக இருக்கும். திருக்கை (Ray) மீன்கள் தட்டையாகவும், வட்டமான உருவமாய் இருக்கும். அவைகள் சுறாமீன்களின் வமிசத்தில் பிறந்தவை. அவைகளுக்குக் கழுத்து இல்லாததனால் தேகத்திற்குக் கீழே வாய்க்கு கொஞ்சம் பின்னால் மூச்சு விடும் செவிள் துவாரங்கள் இருக்கின்றன. சுறா, திருக்கை மீன்களுக்கு வேறொரு அடையாளம் என்னவென்றால் மெதுவாக இருக்கப்பட்ட குருத்து எலும்புகள் தான்