பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புள்ளிமயங்கியல் *செவ்வழியறிதல்' என்றதனால், குளக்கரை, குனக்கரை என்றதுபோல, அல்லன ஒத்த உறழ்ச்சியல்ல வென்பதுகொள்க, 'வழக்கத்தான' என்றதனான், இவ்வீற்று வேற்றுமைக்கண் முடியா தனவெல்லாம் முடித்துக்கொள்க, இலவங்கோடு எனவும், புலம்புக்கனனே எனவும், நிலத்துக்கடந்தான் எனவும் வரும். (எ) இல்ல மரப்பெயர் விசைமர வியற்றே. இஃது, இவ்வீற்றுள் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தல் நுதலிற்று. இ-ன்;- இல்லம் மரப்பெயர் லிசை மர இயற்று-இல்லம் என்னும் மரத்தினைஉணர நின் றபெயர் விசையென்னும் மரத்தின் இயல்பிற்றாய் மெல்லெழுத்து மிக்குமுடியும். உ-ம். இல்லங்கோடு; செதின், தோல், பூ எனவரும். இதன்கண் மகரக்கேடு முன்னர் “எல்லாம்” (சூத்திரம் - கக) என்பதனாற் கொள்க (or) அல்வழி யெல்லா மெல்லெழுத் தாகும். இஃது, அவ வீற்று அல்வழி முடிபு கூறுதல் நுதலிற்று. இ-ன்:-அல்வழி எல்லாம் மெல்லெழுத்து ஆகும் - மகரவீறு அல்வழிக்கணெல் லாம் மெல்லெழுத்தாய்த் திரிந்து முடியும். உ-ம். மால்குறிது; சிறிது, தீது, பெரிது எனலரும், 'எல்லாம்' என்றதனான், இல்விற்று அல்வழிடியில் முடியா தனவெல்லாம் கொள்க, மாஞான்றது; நீண்டது, மாண்டது எனவும்; வட்டத்தழை, வட்டப்பலகை எனவும்: கலக்கொன், கலகெல் எனவும்: நீலக்கண், படிளகாய் எனவும்: நிலநீர் எனவும்: கொல்லுங்சொற்றன், பறக்குராரை எனவும் வரும். அகமென் கிளவிக்குக் கை முன் வரினே முதனிலை யொழிய முன்னவை கெடுதலும் வரைநிலை பின்றே யாசிரி யர்க்க மெல்லெழுத்து மிகுத லாலயி னான. இஃது, இவ்வீற்றுள் மரூஉ. முடிபு கூறுதல் நுதலிற்று. இ-ன் :-- அகம் என் இளவிக்கு கை முன் வரின் - அகம் என்னும் சொல்லிற்கு கை என்னும் சொல் முன்னரின், முதல் நிலை ஒழிய முன்னவை கெடுதலும் - முன் மகர விறுதி" [சூத்திரம்- கரு) என்றதனான் மகரம் கெட்டுகின்ற நிலைமொழி முதல் கின்ற அகரம் ஒழிய அதன் முன் நின்ற அகரமும் அகரத்தாற்பற்றப்பட்ட சி. மெய்யும் செட்டுமுடிதலும் அவைசெடாது இன்று முடித்தலும், வரை நிலை இன்று ஆசிரியர்க்கு - நீக்கும் நிலைமையின்று ஆசிரியர்க்கு; அ வயின் மெல்லெழுத்து மிகுதல்- அவ்விரண்டி டத்தும் மெல்லெழுத்து மிக்கு முடிக, உ-ம், அக்கை , ) கங்கை என வரும். (ஒழிய-தவிர,) (உ)) இலமென் கிளவிக்குப் படுவரு காலை விலையலு முரித்தே செய்யு ளான. - இஃதுவல்லற்று உரிச்சொல்லும் ஒன் றற்குச் செய்யுள் முடிபுறுதல் முதலிற்று.