பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புள்ளிமயங்கியல் இள்:- குயின் என் ஓனவி இயற்கையாகும் - குபின் என்னும் சொல் திரியாது இயல்பாய் முடியும். உ-ம். குபின் குழாம்; செலவு, தோற்றம், பறைவு எனவரும். குயின் என்பது மேகம். [சய்) நகஎ. எகின்மா மாயி னாண்மா வியற்றே. இது, திரிபு விலக்கி அம்மு வகுத்தல் முதலிற்று. இன்:-- எகின் மரம் ஆயின் ஆண்மா இயற்று - எகின் என்னும் சொல் மரப் பெயராயின் ஆண்மரத்தினது இயல்பிற்றாய் அம்முப் பெற்று முடியும். உ - ம், எகினக்கோடு; செதின், தோல், பூ எனவரும், நகஅ. ஏளை யெகினே யகரம் வருமே வல்லெழுத் தியற்கை மிகுதல் வேண்டும். இதுவும் அது, இ-ள்:-ஏனை எகின் அகரம் வரும் - ஒழிந்த மரமல்லா எகின் நிலைமொழிக்கண் அகரம் வந்து முடியும்; வல்லெழுத்து இயற்கை மிகுதல் வேண்டும் - அவ்லிடத்து வரு மொழி வல்லெழுத்து இயல்பு மிக்கு முடிதல் வேண்டும், உ - ம், எகினக்கால்; செவி, தலை, புறம் எனவரும். மேலைச் சூத்திரத்தோடு இதனை ஒன்கை ஓதாததனான், இயல்புகணத்துக்கண்ணும் அசரப்பேறு கொள்க. எகினஞா ற்சி; யாப்பு, அடைவு என வரும். இயற்கை என்றதனான், அகரப்பேற்றோடு மெல்லெழுத்துப்பேறும் கொள்க, எகி னங்கால்; செவி, தலை, புதம் எனவரும், (52) நகசு. கிளைப்பெய ரெல்லாங் கிளைப்பெய ரியல. இஃது, இவ்வீற்றிற் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று, இடள்:- கிளைப்பெயர் எல்லாம் கோப்பெயர் இயல-ன காரவீற்றுக் கிளைப்பெய ரெல்லாம் ணகாரவீற்றுக் கிளைப்பெயர்போலத் திரியாது இயல்பாய் முடியும். உ - ம், எயின் குடி; சேரி, தோட்டம், பாடி எனவரும், எல்லாம் என்றதனான், அக்குச்சாரியையும் வல்லெழுத்தும் பெற்று எயின க்கன்னி என முடிதலும், பார்ப்பனக்கன்னி என நிலைமொழியீறு திரிந்து அக்கும் வல்லெழுத் எம் பெறுதலும், இனிச் சாரியை பொது ஈறு திரிந்து வேளாண்குமரி, வேளான் வாழ்க்கைஎன முடிதலும் கொள்க. நசம், மீனென் கிளவி வல்லெழுத் துறழ்வே, இறவும், அவற்றுள் ஒன்றற்கு வேறுமுடிபு உறுதல் நுதலிற்று. இடள்:-ரீன் என் கிளவி வல்லெழுத்து உறழ்வு - மீன் என்னும் சொல் தன் திரியு வல்லெழுத்தினோம் உறழ்த்து முடியும். உ-ம். மீன்கள், பற்கள், சினை, தலை, புறம் எனவரும்.