பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/147

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ரசு தொல்காப்பியம் - இளம்பூரணம். சாக. அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் எல்லா விறுதியு முகா நிறையும். இஃது, எய்தியது ஒரு மருக்கு மறுத்தல் நுதலிற்று. இ-ன் :- அல்லது கிளப்பினும் - அல்வழியைச் சொல்லும் இடத்தும், வேற்று. மைக்கண்ணும் - வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண்ணும், எல்லா இறுதி உகரமும் நிறையும் - ஆறு ஈற்றுக் குற்றியலுகரமும் கிறைச்தே நிற்கும். உ-ம்:--நாகு கடிது; காகு கடுமை : வாகு கடிது; வாகு கடுமை என வரும். { நிலையும்' என்ற பாடங்கொண்டு, அல்வழிக்கண்னும் வேற்றுமைக்கண்ணும் (ஒற்றுக்கள் இரண்டு தொடர்ந்துவரும் இடைத்தொடர்மொழிகள் அல்லாத) அறுவகை மொழிகளின் இறுதிக்கண்னும் குற்றியலுகரம் நிற்கும் என்று உரைத்தலே பொருத் தம் உடைத்து.) சாய். வல்லொற்றுத் தொடர் மொழி வல்லெழுத்து வருவழி தொல்லை யியற்கை நிலையலு முரித்தே. இஃது, எய்தியது ஒரு மருக்கு மறுக்கின்றது. இ'ள் :--வல்லொற்றுத் தொடர் மொழி - (அவ் ஈற்றுள்ளும்) வல்லொற்றுத் தொடர்மொழி, வல்லெழுத்து வருவழி வல்லெழுத்து முதல் மொழி வருமொழியாய்) வரும் இடத்து, தொல்லை இயற்கை நிலையலும் உரித்து - முன் (கூறிய) இயற்கை நிற்றலும் உரித்து, ..--:-- கொக்குக் கடிது; கொக்குக் கடுமை என வரும். ['எகாரம்' ஈற்றசை, 'தொல்லை இயற்கை' என்பதற்கு ஈண்டுக் கூறும் உகரம் (அதாவது குற்றியலுகரம்) தனது முந்திய தன்மையில் (அதாவது முற்றுகரமாக) நிற் நலும் உரித்து, நில்லாமையும் உரித்து என்று உரைத்தலே பொருத்தம் உடைத்து. P-ம்:-- கொக்கு கடி.சி; கொக்கு கடுமை என்பவற்றில் முற்றுகரம் ஒலித்தலும், கொக்குக்கடிது; கொக்குக்கடுமை என்பவற்றில் குற்றுகரம் ஒலித்தலும் காண்க.) (7) சகக. யகம் வருவழி யிகாங் குதுகும் உகரக் கிளவி துவரத்தேசன் றது. இது, குற்றியலிகரம் புணர்பொதியுள் வருமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இது, குற்றியலுகரம் குற்றியலிகரம் ஆம் இடம் உணர்த்துதல் நுதலிற்று என்று கூறுதல் மிகப்பொருத்தம் உடைத்து.) இ-ன்:- யகரம் வருவழி உகாக் கிளவி ஓவாதோன்றுது - யகர முதல்மொழி வரும் இடத்து நிலைமொழி உகரம் முற்றத்தோன்றாதி; இகரம் குறுகும் - [ஆண்டு) ஓர் இகரம் (வந்து) குறுகும். உ-ம்:- காகியாது, வாகியாது, தென்கியாது, எஃகியாது, கொக்கியாது, குரங் சியாது எனவரும், இதனானே, ஆகார ஈறு அகரம் பெற்றாற் (உயிர் மயங்கியல் - சூத்திரம் உச) போல ஆறு ஈற்றுக் குற்றியலுகரமும் இகரம் பெற்று யகர முதல்மொழியோடு புணரு மாறு கூறிற்றாயிற்று,