சக 144
தொல்காப்பியம் :- இளம்பூரணம் ஐயமென்பது அதிசாரத்தான்வந்தது. நிகழா நின்றவை' என்பது குறுகிநின்றது. வண்டாவது, மயிரின் அணிந்த பூவைச் சூழும் வண்டு. அது பயின்றதன் மேலல்லது செல்லாமையின் அதுவும் மக்களுள்ளா ளென்ற றிதற்குக் கருவியாயிற்று. இழையென்பது அணிகலன். அது செய்யப்பட்டதெனக் தோற்றுதலானும் தெய்வப்பூண் செய்யா அணி யாதலானும் அதுவும் அறிதற்குக் கருவியாயிற்று. வள்ளி என்பது முலையினும் தோளினும் எழுதிய கொடி, அதுவும் உலகின் உள்ளதாகித் தோன்றுதலின் (அதுவும்) கருவியாயிற்று. அலமால் என்பது தடுமாறுதல், தெய்வமாயின் நின்றவழிநிற்கும். அவ்வாறன்றி, நின்றுழி நிற்கின்றிலன் என்று , சுழற்சியும் அறிதற்குக் கருவியாயிற்று, இமைப்பென்பது கண்ணி மைத்தல், தெய்வத்திற்குக் கண் இமையாமையின் அதுவும் அறிதற்குக் கருவியாயிற்று. அச்சமென்பது ஆண்மக்களைக் கண்டு அஞ்சுதல். அது தெய்வத்திற்கு இன்மையான் அதுவும் அறிதற்குக் கருவியாயிற்று. அன்னவை பிறவும்' என்றதனான் கானிலந்தோய்தல், வியர்த்ர்த்தல், நிழலாடுதல் கொள்க. இவை கருவியாகத் துணியப்படும் என்றவாறு. *காட்சி முதலாகிய இத்துணையும் கைக்கிளைக் குறிப்பாம். இதற்குச் செய்யுள் வந்த வழிக்காண்க. இனிக் குறிப்பறிதல் கூறுகின்றாராகலின், அக்குறிப்பு: நிகழும்வழி இவை யெல்லாம் அகமாம். என்னை? இருவர் மாட்டு மொத்த நிகழ்ச்சி யாதலான். இவை தலைமகள் மாட்டுப் புலப்பட, நிகழாது ஆண்டுக் குறிப்பினாற் சிறிது நிகழுமென்று கொள்க. - அவை வருமாறு:-
உண்டார்க ணல்ல தடுநறாக் காமம்போற்
கண்டார் மதிழ் செய்த வின்று,"
(குறள்-3 கூய )
என வரும். பிறவும் அன்ன, . . (4)
, -93. க.
நாட்ட மிரண்டு மறிவுடம் படுத்தற்குக்
கூட்டி யுரைக்குங் குறிப்புரை யாகும்.
- என்-னின் மேல். கலைமகளை இத்தன்மையள் எனத் துணிந்த தலைமகன் குறிப்பறி யாது சாரலுறின் பெருந்திணைப்பாற்படு மாகலானும், இக் கந் திருவ நெறிக்கு ஒத்த உள்ளத்தாராதல் வேண்டுமாதலானும், ஆண்டு - ஒருவரோடொருவர் சொல்லாடுதல் மரபன்மையானும், அவருள்ளக் கருத்தறிதல் வேண்டுதலின், அதற்குக் கருவியாய உணர்த்துதல் நுதலிற்று.
- . நாட்டமிரண்டும் என்பது - தலைமகன் கண்ணும் தலைமகள் கண்ணும் என்றவாறு அறிவுடப்படுத்தற்கு என்பது --ஒருவர் வேட்கை போல இருவர்க்கும் வேட்கை உளதாகுங் கொல்லோ எனக் கவர்ந்து நின்ற இருவரது அறிவினையும் ஒருப்படுத்தற்கு என்றவாறு. கூட்டியுரைக்குக் குறிப்புமையாகும் என்பது--தமது வேட்கையொடு கூட்டி ஒருவர் ஒருவருக்கு உரைக்கும் காமக் குறிப்புரையாம் என்றவாறு.
இதன் பொழிப்பு:- இருவர்க்கும் கவர்த்தி நின்ற அறிவை ஒருப்படுத்தற் பொருட்டு வேட்கையொடு கூட்டிக் கூறுங் காமக்குறிப்புச்சொல் இருவரது நாட்டமாகும் என்றவாறு ஆகும் என்பதனை நாட்டம் என்பதனொடு கூட்டியுரைக்க. இதற்குச் செய்யுள் :- '
'பானவந் 1 தண்கழிப் பாடறிந்து தன்னையர்
நூனல நுண்வலையாற் கொண்டெடுத்த - கானற் .
படுபுலால் காப்பான், படைநெடுங்க ணேக்கங்
கடிபொல்லா வென்னையே காப்பு."
(திணைமாலை-ந..32) கண்களினான் அறிய என்ற வாறு - (5)
1, தண்க ழுநீர்' என்பது. பிரதி..
16