பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - கற்பியல் உன் எசா எஎ. இவை பார்ப்பார்க் குரிய வென் றலாறு. 'ஒருபாற் கிளவி யேனைப்பாற் கண்ணும்" (பொருளியல்-உ.எ) வரும் என்பதனால் தோழிமாட்டும் பாங்கன்மாட்டும் கொள்க. (சு) எல்லா லாயிலு மிருவர் தேஎத்தும் புல்லிய மகிழ்ச்சிப் பொருள வென்ப. இது வாயில்கட் குள்ளதோர் மரபு உணர்த்திற்று. வாயில்கள் எல்லாம் இருவர்மாட்டும் பொருந்திய மகிழ்ச்சிப் பொருண்மையை யுடைய என்றவாறு. இருவராவார் தலைவனும் : தலைவியும். எனவே வெகுட்சிப்பொருண்மை கூறப் பெறார் என்றவாறு. {X.எ) அன்புதலைப் பிரிந்த கிளவி தோன்றிற் சிறைப்புறங் குறித்தன் றென்மனார் புலவர். இது மேலதந்கோர் புறனடை, வாயில்கண் மகிழ்ச்சிப் பொருண்மை கூறுதலன்றி யன்பு நீங்கிய கிளவி கூறினாரா யிற் றலைவன் சிறைப்புத்தனாகப் பெறுவர் எனச் சொல்லுவர் என்றவாது. இதுவும் ஓரிலக்கணங் கூறியவாறு. (124) ஏஎஅ. தற்புகழ் கிளவி கிழவன்முற் கிளத்த லெத்திறத் தானுங் கிழத்திக் கில்லை முற்பட வகுத்த விரண்டலங் கடையே. இது தலைவிக் குரியதோர் மரபுணர்த்திற்று. தலைவன் முன்னர்த் தன்னைப்பு சழுங் கூற்று எவ்வழியானும் கிழத்திக்கு இல்லை; முற்படக் கூறிய இரண்டிடமும் அல்லாதவழி யென் நலாறு. அவையாவன தலைவன் பரத்தையிற் பிரிந்து வந்தவழி இரத்தலும் தெளித்தலும் என அகத்திணையியலுட் கூறிய இரண்டும். அவ்வழிப் புகழ்தலாவது:

  • 'ஒரூஉ யெங்கூந்தல் கொள்ளல் யாதின்னை

- 2வெரூஉதுங் காணுங் கடை” (கலித் - அள) என் நவழித் தன்னை யுயர்த்துக் கூறுதலாற் புகழ்ந்தாளாம்: நின்னை வெருவாதார் பிறர் என்னும் உள்ளக்கருத்தினால். "நீ கூறும் பொய்ச்சூ ள ணங்காயின் மற்றினி யார்மேல் விளியுமோ க-று” (கலித்"- 44} என் றவழியும் பெண்டிர் பலர் உளராயினும் அவர் எல்லார் மாட்டுஞ் செல்லாது தன்மேல் வருமெனக் குறித்தாராதலில் தன்னைப் புகழ்ந்தாளாம். பிறவுமன்ன. (1) எகூ. கிழவி முன்னர்த் தற்புகழ் கிளவி கிழலோன் வினைவயி னுரிய வென்ப. இது தலைவற் குரியதோர் மரபுணர்த்திற்று. (பிரதி)-1. ஒருவுதீ. 2. வெருவுதும். 3. எணங்காகி.