பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௱௪௮

தொல்காப்பியம் - இளம்பூரணம்


எனவும் ஓதியவதனான் உள்ளஞ் சென்றவழியும் மெய்யுறுபுணர்ச்சி வரைந்தெய்தி நிகழ்பவென்றாராம். அவ்வழிச் சாக்காடெல்லையாகிய மெய்ப்பாடுவரின் மெய்யுற்றுப் புணரப் பெறுமென்பது உணர்த்திற்று.

வேட்கை முதலாகச் சாக்காடு ஈறாக ஓதப்பட்ட காமச்சிறப்புடையனவாற்றாற் களவு ஆமென்று சொல்லுவர் என்றவாறு.

ஆனும் ஆமும் எஞ்சி நின்றன. இவற்றை அவத்தையென்ப. அஃதேல், அவை[ப]த்துளவன்றே; ஈண்டுரைத்தன வொன்பதாலெனின், காட்சி விகற்பமுங் கூறினார், அஃது உட்படப் பத்தாம். காட்சி விகற்பமாகிய ஐயமுந் துணிவும் முதலது; வேட்கை இரண்டாவது; என்று கொள்க.

வேட்கை யாவது-- பெறல் வேண்டு மென்னும் உள்ள நிகழ்ச்சி.

ஒருதலையுள்ளுத லாவது--இடைவிடாது நினைத்தல்.

“உள்ளிக் காண்பென் போல்வன் முள்ளெயிற்
றமிழ்த மூறுஞ் செவ்வாய்க் கமழகி
லார நாறு மறல்போற் கூந்தற்
பேரமர் மழைக்கட் கொடிச்சி
மூரன் முறுவலொடு மதைஇய நோக்கே.” (குறுந் -௨௮௪)

மெலித லாவது — உண்ணாமையான் வருவது.

ஆக்கஞ்செப்ப லாவது— உறங்காமையும் உறுவவோதலும் முதலாயின கூறுதல்.

“ஒண்டொடி யரிவை கொண்டன ணெஞ்சே
வண்டிமிர் பனித் துறைத் தொண்டி யாங்க
ணுரவுக்கட லொலித்திரை போல
விரவி னானுந் துயிலறி யேனே” (ஐங்குறு–௱௭௨]

என வரும்.

நாணுவரையிறத்த லாவது- நாண் நீங்குதல்.

காமம் விடுவொன்றோ மாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேனிவ் விரண்டு. (குறள் - கஉசஎ)

நோக்குவ வெல்லாம் அலையே போற 'லாவது-- தன்னாற் காணப்பட்டன சொல்லாக் தான் கண்ட உறுப்புப்போலுதல்.

ஒங்கெழிற் கொம்பர் நடுவி தெனப்புல்லுங்
காந்தட் வெருங் கருவிளம் பூக்கொள்ளு
மாந்தளிர் கையிற் றடவரு மாமயில்
பூம்பொழி னோக்கிப் புகுவன் பின் செல்லுக்
தோளெனச் சென்று துளங்கொளி வேய்தொடு
நீள் கதுப் பிஃதென தீரற லுட்புகும்.” என்றாற்போல்வன.

மறத்தல் பித்தாதல். மயக்கமாவது--மோகித்தல். சாக்காடு - சாதல். இவற்றுள் சாதல் பத்தாம் அவத்தையாதலால் ஒழிந்த எட்டுங் களவு நிகழ்தற்குக் காரணமாம் என்று கொள்க. இது தலைமகட்கும் தலைமகற்கும் ஒக்கும். இவற்றிற்குச் செய்யுள் வந்த வழிக் காண்க. (க)