பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாவது - பொருளியல், பாகல், இசைதிரிக் திசைப்பினு மிபையுமன் பொருளே பசை திரிந் திசையா வென்மனார் புலவர். என்பது சூத்திரம். இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், பொருளியல் என்னும் பெயர்த்து : பொருளியல்பு உணர்த்தினமையாற் பெற்ற பெயர். என்னை பொருளியல்பு உணர்த்திய வாறு எனின், மேற் சொல்லப்பட்ட ஒத்துக்களினும் இனிச் சொல்லும் ஒத்துக்களினும் வரும் பொருளினது தன்மை யுணர்த்துதலிற் பொருளியல் உணர்த்திற்றாம். இதனை 'ஒழிபியல்' எனினும் இழுக்காது; அகப்பொருள் புறப்பொருள் என்பன விரண்டு பொருண்மையினும் எஞ்சி நின்றன கூறின மையின். இதன் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ எனின், தொடர்மொழிக்கட் பொருள் இயையு மாறு உணர்த்திற்று. இசை திரிந்து ஒலிப்பினும் பொருள் இயையும்; அவ்வழி அச்சொற்கு அங்கமாகிய 2அசை திரிந்தொலியா என்றவாறு. என்றது சொல்லொடு சொல் தொடர்வுபடும் வாய்பாட்டாற் றொடராது பிறிதோர் வாய்பாட்டாற் றொடுப்பினும் பொருட்டொடர்பு உண்டாயிற் பொருள் இயையும் வழி அசைச்சொற்கள் திரியாது நின்றநிலையே பொருள்படுமா றாயிற்று. உதாரணம்:- கார்.விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த் தாரன் மாலையன் றதைந்த கண்ணியன் மார்பி னஃதே மையி னுண்ஞா ணுதல திமையா நாட்ட மிகலட்டுக் கையது கணிச்சியொடு மழுவே மூவாய் வேலு முண்டத் தோலா தோற்கே யூர்ந்த தேறே சேர்ந்தோ ளுமையே செவ்வா னன்ன மேனி யவ்வா னிலங்குபிறை யன்ன விளங்குவால் லையெயிற் றெரியகைந் தன்ன வவிர்த்துவிளக்கு புரிசடை 3முதிராத் திங்களொடு சுடருஞ் சென்னி மூவா வமாரு முனிவரும் 4பிறரும் யாவரு மறியாத் தொன்முறை மரபின் வரிகிளர் வயமா னுரிவை தை இய யாழ்கெழு மணிமிடற் றந்தணன் ஏறாவி ராணிழற் றவிர்த் தன்றா லுலகே.” (அகம் - கடவுள்வாழ்த்து) (பிரதி)-1, மிசையுமன். 2. அங்கம். 3. முதிர்ந்த. 4. யர்வரும் பிறரு. 5. ராவின்