௱௫௰
தொல்காப்பியம் - இளம்பூரணம்
கண்ணே கதவ வல்ல நண்ணா
ராண்டலை மதில ராகவு முரசுகொண்
டோம்பரண் கடந்த வடுபோர்ச் செழியன்
பெரும்பெயர்க் கூட லன்னநின்
கரும்புடைத் தோளு முடையவா லணங்கே.”
[நற்றிணை-௩௯]
நன்னய முரைத்த லாவது—தலைமகளினது நலத்தினை யுரைத்தல்.
“சேரன் மடவன்னஞ் சேரன்னடை யொவ்வாய்
சேரன் மடவன்னஞ் சேரன்னடை யொவ்வா
யூர்திரை வேலி யுழக்கித் திரிவாள்பின்
சேரன் மடவன்னஞ் சேரன்னடை யொவ்வாய்.”[சிலப்.கானல்-௨௩]
நகைநனியுறவு அந்நிலையறித லாவது—தலைமகன் தன் நன்னயமுரைத்தலைக் கேட்ட தலைவிக்கு இயல்பாக அகத்து உளவாகும் மகிழ்வாற் புறந்தோன்றும் முறுவற் குறிப்பு மிக்குத்தோன்றா அந்நிலையினைத் தலைவன் அறிதல்.
“மாணிழை பேதை நாறிருங் கூந்த
லாணமு மில்லா ணீருறை சூருடைச்
சிலம்பிற் கணங்காய் முயன்ற செறியிய
னொதும னோக்கைக் காண்மோ நெஞ்சே
வறிதான் முறுவற் கெழுமிய
நுடங்குமென் பணைவேய் சிறுகுடி யோனே.”
மெலிவு விளக்குறுத்த லாவது—தலைவன் அகத்துறும் நோயாற் புறத்து நிகழும் தளர்வினைக் குறிப்பான் எடுத்துக்கூறலும். உதாரணம் வந்துழிக் காண்க.
குறிப்பாவன புறத்துறுப்பா யவர்க் கின்றியமைவன.
தன்னிலை யுரைத்த லாவது—அப் புறநிகழ்ச்சியின் பொலிவிழவைக் கண்ட தலைமகன்மாட்டுத் தலைவன் தன் உள்ள வேட்கை மீதூர்வினை நிலைப்படக் கூறுதல்.
“சொல்லிற் சொல்லெதிர் கொள்ளா யாழநின்”
என்னும் நற்றிணைப்பாட்டுள்,
“காமங் கைம்மிகிற் றாங்குத லெளிதோ
... ... ...
... ... கடைமணி சிவந்தநின்
கண்ணே கதவ வல்ல.” [நற்றிணை -௩௯]
எனத் தன்னிலை யுரைத்தவாறு காண்க.
தெளிவு அகப்படுத்த லாவது—தலைவன் முன்னிலையாக்கல் முதலியன கூறிப் பின்னர் இயற்கைப் புணர்ச்சியினை விழைந்து நின்றானாக, அப்புணர்ச்சியினைக் கூறுவார் முன்னம் ஒத்தபண்புடைமை உள்ளத்து இருவர் மாட்டும் வேண்டுதலின் தலைமகள் பண்பினைத் தலைவன் அறிந்து அத்தெளிவை தன்னகப்படுத்துத் தேர்தல்.
“யாயும் யாயும் யாரா கியரோ”
என்னும் குறுந்தொகைப்பாட்டுள்,
“அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே”[குறுந் - ௪௰]
என இயற்கைப் புணர்ச்சி முன்னர்த் தலைவன் தலைவியர் உள்ளம் ஒத்தபண்பினைக் கூறியவாறு காண்க.
1. ‘கின்றியமையாதன’ என்றிருக்கவேண்டும் போலும்.