உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தொல்காப்பியம் - இளம்பூரணம்

            பெற்றவழி மகிழ்ச்சியும் என்பதுஇடந் தலைப்பாட்டினை யொட்டி நிகழும் இன்பினைப் பெற்றவழி அகத்துத் தோற்றும் பெருமகிழ்வும்.
  
               “நீங்கிற் றெறூஉங் குறுகுங்காற் றண்ணென்னுந்
                தீயாண்டுப் பெற்றா ளிவள்” (குறள் - 1104)
                
                  ஒடுங்கீ ரோதி யொண்ணுதற் குறுமக
                  ஊறுந் தண் ணீர ஊரணங்கினளே
                  யினைய ளென்றவட் புனையள வறியேன்
                  சிலமெல் லியவே கிளவி
                  யணைமெல் லியல்யா முயக்குங் காலே.” (குறுந் - எய]70
                  

இவை புணர்ச்சியான் மகிழ்ந்ததற்குச் செய்யுட்கள்.

    பிரித்தவழிக் கலங்கலாவது- இவ்வாறு கூடின தலைமகள் பிரிந்தவழிக் கலக்கமுறு தலும் என்றவாறு.
    
                'என்று மினிய  ளாயினும் பிரித
                 லென்று மின்னா ளன்றே நெஞ்சம்
                 பனிமருந்து விளைக்கும் பரூஉக்க ணிளமுலைப்
                 படுசாந்து சிதைய முயங்குஞ்
                 சிறுகுடிக் கானவன் பெருமட மகளே.”
   என வரும்.
   இத் துணையும் இடந்தலைப்பாடு. பெற்றவழி மகிழ்தலும் பிரிந்தவழிக் கலங்கலும் பாங்கற் கூட்டத்தினுந் தோழியிற் கூட்டத்தினும் நிகழும்.
   
  நிற்பவைநினைஇ நிகழ்பவை யுரைப்பினும் என்பது--காமநுகர்ச்சி யொன்றனையும் நினையாது இவளாலே நமக்கு இல்லறம் இனிது நடக்குமென்று உட்கோடலும்.

2நிற்பவை--இல்லற வினை.

                தேரோன் றெறுசதிர் மழுங்கினுந் திங்க
                டீரா வெம்மையொடு திசைநடுங் குறுப்பினும்
                பெயராப் பெற்றியிற் றிரியாச் சீர்சால்
                குலத்திற் றிரியாக் கொள்கையுங் கொள்கையொடு
                நலத்திற் றிரியா நாட்டமு முடையோய்
                கண்டத னளவையிற் கலங்குதி யெனினிம்
                மண்டிணி கிடக்கை மாநில
                முண்டெனக் கருதி யுணரலன் யானே.”

இது நிற்பவை நினைஇக் கழறியது.


 1. இவ்விரண்டு துறையும் இடந்தலைப்பாட்டுக்கும் ஒக்குமன்றோ வெனின், பெற்றுழிமகிழ்கலும் பிரிந் துழிக்கலங்கலும் என்பன எந்நிலத்தார்க்கும் எவ்வொழுக்கினுக்கும் ஏற்குமாகலின் ஒக்குமேல், இடந்தலைப்பாட்டுக்கும் பாங்கற்கூட்டம் பாங்கியிற் கூட்டம் என்பனவற்றுக்கும் கொள்க (த.மு. சொ.). 2. இது தொடங்கி “இது நிற்பவை நினைஇக்

கழறியது என்பது முடியவுள்ளது (த. மு. சொ.):