தொல்காப்பியம் - இளம்பூரணம் ௱௬௯
“கியான்றன் னறிவல் தானறி யலளே
யாங்கா குலன்கொ றானே
[இது பாங்கன் நின்னை அணங்காக்கியாள் எவ்விடத்தவள் எவ்வியலின ளென்று வினாய் அறிந்தது.]
இவ்வாறு கேட்ட பாங்கன் அவ்வழிச் சென்று கண்டதற்குச் செய்யுள்:--
“இரவி னானு மின்றுயி லறியா
தாவுறு துயர மெய்துப தொண்டித்
தண்ணறு நெய்த னாறும்
எனவரும். -
இச்சூத்திரத்துட் கூற்று வரையறுத்துணர்த்தாமை பாங்கற் கூற்றும் அடங்கற்குப் போலும்.
பெட்ட வாயில்பெற் றிரவு வலியுறுப்பினும் என்பது--மேற்சொல்லிய வாற்றான் உடம் பட்ட பாங்கனால் தலைகளைப் பெற்றுப் பின்னும் வரைந்தெய்த லாற்றாது களவிற் புணர்ச்சி வேண்டித் தோழியை இரந்துபின்னின்று கூட்டக் கூடுவன் என்னும் உள்ளத்தனாய் அவ்விரத்தலை வலியுறுத்தினும் என்றவாறு.
வலியுறுத்தலாவது, தான் வழிமொழிந்தது யாது தான் அவ்வாறு செய்குவல் என்றமை. பெட்டவாயிலால் தலைகளைக் கண்டு கூறியதற்குச் செய்யுள்:--
“கடல்புக் குயிர்கொன்று வாழ்வர்நின் னையர்
உடல்புக் குயிர்கொன்று வாழ்வைமன் னீயும்
மிடல்புக் கடங்காத வெர்முலையேற் பார
இன்னும், பெட்டவாயில் பெற்று என்பதற்கு 'இரட்டுற மொழிதல் என்பதனால் தலைமகள் தான் விரும்பப்பட்ட தோழியாகி எமக்கு வாயில் நேர்வாள் இவள் எனப்பெற்றுப் பின்னிருந்து குறையுற நினைப்பினும் என்றுமாம். அதற்குச் செய்யுள்:
“
“தலைப்புணைக் கொளினே தலைப்புணைக் கொள்ளுங்
கடைப்புணைக் கொளின கடைப்புணைக் கொள்ளும்
புணைகை விட்டுப் புனலோ டொழுகி
னாண்டும் வருகுவள் போலு மாண்ட
மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச்
செவ்வெரி நுதழுங் கொழுங்கடை மழைக்கட் .
இரவு வலியுறுத்தற்குச் செய்யுள் வர் தவழிக் கண்டுகொள்க.
“கொண்டன் மாமழை குடக்கேர்பு குழைத்த
சிறுகோ லிணர பெருந்தண் சாந்தம்
வகைசே ரைம்பாற் றகைபெற வாரிப்
(பிரதி)- 1. தண்னுறு. 2. வரையாதோதிற்றுப்.