________________
- ஈசுஉ
தொல்காப்பியம் - இளம்பூரணம் இச்சொல்லப்பட்ட பன்னிருவகைப்பட்ட கூட்டத்திற்கும் பாங்கராயினார் நிமித்த மாகவேண்டுதலின், அவற்றுள் தலைவற்கும் தலைவிக்கும் ஒத்தகாத லுள்வழிப் பாங்கராயினாரால் நிகழும் நிகழ்ச்சி கந்திருவப்பகுதியாகவும், ஒருதலைவேட்கை யாதியவழி இவரால் வரும் நிகழ்ச்சி கைக்கிளையாகவும், ஒப்பில் கூட்ட மாகியவழிப் பெருந்திணையாகவும் கொள்க' ஐந்திலம் என்பதனை முல்லை குறிஞ்சி முதலாயின வென்றார் உளராலெனின், - 'முத லொடு புணர்ந்த' என்பதனால் நிலம் பெறு மாதலான் நிலம் என்பதற்கு வேறுபொருள் உரைத்தல் வேண்டு மென்க. அஃது அற்றாக, இற்கிழத்தி, காமக்கிழத்தி என்பார் உள்ளப் புணர்ச்சியானாதல் மெய்யுறு புணர்ச்சியானாதல் வரையப்பட்டாராகப் பொருட்பெண்டிராகிய காதற்பரத்தையர் கூட்டம் ஒத்தகாமமாகியவா றென்னை யெனின், அவரும் பொருளானாதல், அச்சத்தானாத லன்றி அன்பினால் கூடுதலின் அதுவும் கந்திருவப் பாற் படும். அவ்வாறன்றி அவரைப் பிறிது நெறியாற் கூடுவராயின் இவன்மாட்டுத் தலைமை இன்றாமென்பது உணர்ந்து கொள்க. அஃதாமாறு: - 'அன்னை கடுஞ்சொ லறியா தாய் போலநீ யென்னைப் புலப்ப தெரறுக்குவென் மன் யான சிறுகாலை யிற்கடை வந்து குறிசெய்த வவ்வழி யென்றும் யான் காணேன் றிரிதா" வெவ்வழிப் பட்டாய் சமனாக விவ்வெள்ளல்” (கலித் - கஎ)
எனவும், கண் டேனின் மாயங் களவாதல்” என்னும் கலியுள், . நோயும் வடுவங் கரந்து மகிழ் செருக்கிப் . பாடுபெய னின்ற பானா ளிரவிற் றொடிபொலி தோளு.முலையுங் கதுப்புங் வடிவார் குழையு மிழையும் பொறையா .. வொடிவது போலு நுசுப்போ [L]டி தளரா . வாராக் க(வவினோ டொருத்திவந் தல்கற்றன் " சீரார் ஞெகிழஞ் சிலம்பச் சிவந்துநின் போரார் கதவ மிதித்த தமையுமோ” (கலித் - சுய] . எனவும், பரத்தையர் அன்பினாற் கூறியவாறும் இவர் இற்கிழத்தியும் காமக்கிழத்தி யும் அன்மையும் அறிந்து கொள்க. இவ்வகை வருவன ஐந்து நிலனாய் வரும். அஃதேல், மருதக்கலியுள், "அடக்கமில் போழ்தின் கட் பூத்தை காமுற்ற : தொடக்கத்துத் தாயுழைப் புக்கான்” (க்லித் - அஉ.). . எனவும், .. - வழிமுறைத்தாய்' எனவும், 'புதியோள்' எனவும், இவ்வாறு கூறக் கேட்கின்ற காமக்கிழத்தியு மென மனைவியர் நால்வருளர். அவரெல்லாரையும் கூறாது மனைக்கிழத்தி யர் இருவர் என்றதனாற் பயன் இன்றெனின், அவரெல்லாரும் இற்கிழத்தியும் காமக்கிழத் தியு மென (இரண்டு பகுப்பிலுன்) அடங்குப. அன்றியும், இவர் நால்வரோடு பரத்தை யுட்பட ஐவர் கத்திருவப்பகுதியர் என உரைப்பினும் அமையும். - - 1. இதன் பின் 'புணர்ச்சி நிமித்தமாகத் தலைமகனிரத்தலும், குறையுறுதலும். மடலேறுவ லெனக் கூறுதலும் பெறும் என் றவாறு' எனப் பிரதியிற் காணப்படுகிறது. பொருட்டொடர்பு நோக்கி இவ் வாக்கியம் ளரு எ-ம் பக்கத்திறுதியிற் சேர்க்கப்பட்டுளது.