பொருளதிகாரம் - களவியல் சாங் ‘பரத்தை வாயில் நால்வர்க்கு முரித்தே' (பொருளியல் - உக] என ஓதுதலானும், தலைவற்குப் பிரமம் (முதலாக வரும் நான்கு வருணத்துப் பெண்பா லாரும் பாத்தையும் என ஐவகைப்படுமென்பதூஉம் ஒன்றெனக் கொள்க.
ளரு . இருவகைக் குறிபிழைப் பாகிய விடத்துங் காணா வகையிற் பொழுதுநனி யிகப்பினுந் தானகம் புகாஅன் பெயர்த லின்மையிற் காட்சி யாசையிற் களம்புக்குக் கலங்கி வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதினும் புகா அக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப் பகாஅ விருத்தின் பகுதிக் கண்ணும் வேளா ணெதிரும் விருப்பின் கண்ணுந் தாளா ணெதிரும் பிரிவி னானு நாணுசெஞ் சலைப்ப விடுத்தற் கண்ணும் வரைதல் வேண்டித் தோழி செப்பிய புரைதீர் கிளவி புல்லிய வெதிரும் வரைவுடம் படுதலு மாங்கதன் புறத்தும் புரைபட வந்த மறுத்தலொடு தொகைஇக் கிழவோன் மேன வென்மனார் புலவர்.
இது, தோழியிற் கூடிய தலைமகன் வரைந்தெய்துக்காறும் (கூறும்) பொருண்மை
யுணர்த்துதல் நுதலிற்று. இருவகைக் குறிபிழைப் பாகிய விடத்தும் என்பது--பகற்குறியும் இரவிற்குறி யும் பிழைப்பாகிய இடத்தும் என்றவாறு. பகற்குறி யிரவிற்குறியென்பது எற்றாற்பெறுது மெனின்,
குறியெனப் படுவ திரவினும் பகலினும்
அறியக் கிளந்த வாற்ற தென்ப.” (களவியல் - ஈய] என்பதனாற் கொள்க. அக்குறிக்கண் தலைவி வரவு பிழைத்தவிடத்துத் தலைவன் கூற்று நிகழும் என்றவாறு.
'மழைவர வறியா மஞ்ஞை யாலு
மடுக்க னல்லூ ரசைநடைக் கொடிச்சி தானெம் மருளா ளாயினும் யாந்தன் னுள்ளுபு மறந்தறி யேமே." (ஐங்குறு - உசுசு)
இது, குறிபிழைத்தவழித் தோழிக்குச் சொல்லியது.
“இல்லோ னின்பங் காமுற் றாஅங் கரிது வேட்டனையா னெஞ்சே காதலி நல்லா ளாகுத லறித்தாங் கரியா ளாகுத லறியா தோயே.” (குறுந் ாஉய) இது, குறிபிழைத்தவழி) உள்ளத்திற்குச் சொல்லியது.