பாசுசி
தொல்காப்பியம் - இளம்பூரணம் காணா* வகையிற் பொழுதநனி யிகப்பினும் என்பது- தலைமகளைக் காணாவகையிற் பொழுது மிகவுங் கடப்பினுங் கூற்று நிகழும் என்றவாறு. செய்யுள் :
"உள்ளிக் காண்பென் போல்வல் முள்ளெயிற் றமிழ்த மூறுஞ் செவ்வாய்க் கமழகி லார நாறு மறல்போற் கூந்தற் பேரமர் மழைக்கட் கொடிச்சி மூரன் முறுவலொடு மதைஇய நோக்கே.” (குறுந் - உ அசு) என வரும்.
தானகம்புகாஅன் பெயர்த லின்மையிற் ...பொழதினும் என்பது --காணாவகையிற் பொழுது மிகக்கழிந்துழிக் காட்சி யாசையினாற் குறிபிடத்துச் சென்று ஆண்டுக்காணாது கலங்கி வேட்கையான் மயக்கமுற்றுச் செயலற்று நிற்குங் காலத்தினுங் கூற்றுநிகழும் என்றவாறு. புகான் என்பது முற்று வாய்பாட்டான் வந்த வினை யெச்சம். செய்யுள் வந்தவழிக்
காண்க.
புகாஅக் காலை புக்கெதிர்ப் பட்டுழிப் ..கண்ணும் என்பது- தான் புகுதற்குத் தகுதியில்லாத காலத்துக்கண் அகம்புக்கெதிிர்ப் பட்டுழி அவரால் நீக்கப்படாத விருத்தின் பகுதிய னாகியவழியும் கூற்று நிகழும் என்றவாறு. அது குறிவழிக்கண்டு கூறுதல். அவ்வழித் தலைவிக்குக் கூறிய செய்யுள் : இரண்டறி கள வினங் காத லோளே முரண்கொ டுப்பிற் செவ்வேன் மலையன்
முள்ளூர்க் கான)ம் கண்ணுற வந்து நள்ளென் கங்கு னம்மோ ரன்னள் கூந்தல் வேய்ந்த விரவுமல ருதிர்த்துச் சாந்துளர் குறுங்கதுப் பெண்ணெய் நீவி யமரா முகத்த வாகித் தமரோ ரன்னள் வைகறை யானே." (குறுந் - Wa]
என வரும். -
வேளா ணெதிரும் விருப்பின் கண்ணும் என்பது--- தலைவி உபகாரம் எதிர்ப்
பட்ட விருப்பின் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. அது குறிவழிக்கண்டு கூறுதல். அவ்வழித் தலைவிக்குக் கூறிய செய்யுள்:--
'சிலம்புகமழ் காந்த ணறுங்குலை யன்ன
நலம்பெறு கையினென் கண்புதைத் தோயே பாய லின்றுணை பாதிய பணைத்தோட் டோகை மாட்சிய மடந்தை நீயல துளரோவென் னெஞ்சமர்ந் தோரே.” (ஐங்குறு - உாக.]
இது, தலைவி கண்புதைத்தவழித் தலைவன் கூறியது. "குருதி வேட்கை யுருகெழு வயமான் வலிமிகு முன்பின் மழகளிறு பார்க்கு மரம்பயில் சோலை மலியப் பூழிய ருருவத் துருவி னாண்மேய வாரு (பிரதி)- 1. பார்க்கு. -