பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - களவியல்

'

சாசு

தேனிமிர் தண்கரைப் பகுக்குங்
       கானலம் பெருந்துறைப் பரதவ னெமக்கே.”

(அகம் - உா அய)

 எனவரும்.
  கிழவோன் மேன வென்மனார் புலவர் என்பது-இச் சொல்லப்பட்டன வெல் லாங் கிழவோன் இடத்தன என்றவாறு.
  
 கூற்றென்னாது பொதுப்படக் கடறுதலான் உள்ள நிகழ்ச்சியும் கூற்றும் கொள்ளப் படும்.
 

ாசு.

காமத் திணையிற் கண்ணின்று வரூஉ
       நாணு மடனும் பெண்மைய வாகலிற்
       குறிப்பினு மிடத்தினு மல்லது வேட்கை
       நெறிப்பட வாரா வவள்வயி னான

  என்பது மேல் தலைவர்க் குரிய கிளவிகூறி, இனித் தலைவிக்குரிய கிளவி கூறுகின்றா ராகலின், முற்பட அவள் தலைவனைக் கண்ணுற்றவழி வரும் இலக்கணம் உணர்த்து தல் நுதலிற்று. 
  

- தலைவியிடத்து நிலைமை பெற்று வருகின்ற நாணமும் மடனும் பெண்மைக்கு அங்க மாகலின், காமவொழுக்கத்தின் கண் குறிப்பினாலும் இடத்தினானுமல்லது வேட்கை புலப் பட நிகழாது தலைவியிடத்து என்றவாறு.

 காமத்திணை என்பதனைக் குறிப்பென்பதற்கு முன்னே கூட்டி யுரைக்க. அச்சமும் இயல்பன்றோவெனின், அதுவும் வேட்கைக் குறிப்பினான் நீங்கு மென்ப: அச்சமுன் வழி வேட்கை நிகழாமையின். வேட்கை யுள்வழி நாணும் மடனும் நீங்காலோ எனின், அது வருகின்ற சூத்திரத்தாற் கூறுப. இதனாற் சொல்லியது தலைவி தலைவனை எதிர்ப் பட்டு முன்னிலை யாக்கல் முதலாகத் தலைவன் மாட்டு நிகழ்ந்தமை போலத் தலைவிமாட்டு நிகழ்பவை உளவோ வெனின், அவர் மாட்டுக் குறிப்பினானாதல் சொல்லுதற்குத் தக்க விடத்தினானாதல் தோற்றுவதல்லது, புலப்பட்டு நிகழா தென்றவா றாயிற்று.

  "உண்டார்க ணல்ல தடுநறாக் காமம்போற்
     கண்டார் மகிழ்வெய்த லின்று."

(குறள் - நகம்]

       என்றது தலைவனைக் கண்ட தலைவி வேட்கைக் குறிப்பினால் தன்னுள்ளே கருதியது. இடம்பற்றி வேட்கை தோற்றியதற்குச் செய்யுள் :---
       

  நெடுங்கொடி நுடங்கு நாவாய் தோன்றுவ
         காணா மோவெனக் காலிற் சிதைய
         நில்லாது பெயர்ந்த பல்லோ ருள்ளு
         மென்னையே குறித்த நோக்கமொடு நன்னுத
         லொழிகோ யானென வழிதகக் கூறி
         பாம்பெயர் தோறு நோக்கித் தான்றன்
         நெடுந்தேர்க் கொடிஞ்சி பற்றி
         நின்றோள் போலுமின்றுமென் கட்கே."

(அகம் - ]

எனத் தன் குறிப்புக் காலத்தாற் கூறுத லாற்றாது பின் இடம்பெற்றுழிக் கூறியவாறு: காண்க , - - -- -